Shah Rukh Khan - Gauri Khan: மும்பை நகரம் ’விநாயகர் சதுர்த்தி’ நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபளம். தங்கள் அன்புக்குரிய பிள்ளையாரை அந்நாளில் கொண்டாடி தீர்ப்பார்கள். இதில் பொது மக்களுடன் இணைந்து பாலிவுட் பிரபலங்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்நிலையில், இந்த வருடம் நடந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது மனைவி கவுரி கான் மற்றும் மகன் ஆப்ராம் ஆகியோருடன் கலந்துக் கொண்டார். அதோடு அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிள்ளையாரின் சில அழகான படங்களைப் ரசிகர்களுக்கு தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளையும் பகிர்ந்திருந்தார். அனைத்துப் பண்டிகைகளையும் ஆர்வமுடன் கொண்டாடும் ஷாருக் கான், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கணபதி சிலையை தனது வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவையும் சிறப்பிக்கிறார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் ஷாருக்கானின் காதல் மனைவி கவுரி கான் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ’த்ரோபேக்’ படத்தைப் பகிர்ந்துள்ளார். தனது கணவருக்காக ஆடைகளை வடிவமைத்த, ’பாசிகர்’ திரைப்படத்தின் 'யே காளி காளி ஆன்கேன்' பாடலில் புகைப்படம் தான் அது. நடிகை காஜலுடன் இணைந்து நடனமாடும் ஷாருக் கான் ஹேண்ட் பெயிண்டெட் ஜீன்ஸ், வெள்ளை நிற கிராஃபிக் டி-ஷர்ட், அதற்கு மேல் சிவப்பு சட்டை அணிந்திருப்பதை அதில் காணலாம். ”90-களில் நான் வடிவமைத்த உடையா இது என என்னாலேயே நம்ப முடியவில்லை” எனவும் அதில் தெரிவித்துள்ளார் கவுரி...