Devarattam Trailer: நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் ரிலீஸுக்கு ரெடியாகி இருக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’.
‘கொம்பன்’, ‘குட்டிப்புலி’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய சமூகக் கருத்துகள்!? பொதிந்த படங்களை இயக்கிய முத்தையா இதனை இயக்கியிருக்கிறார்.
இதில் கெளதமுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். காமெடி(?) வேடத்தில் சூரி நடித்திருக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கெளதம் கார்த்திக்கிற்கு இந்தப் படத்தில் ‘நவரச இளவரசன்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அடி தடி, வெட்டுக் குத்து, அரிவாள், வேல் கம்பு என இன்றைய சமுதாயத்திற்கு தேவையானவற்றை (?) அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
”பொறந்தோம் வாழ்ந்தோம்ன்னு எல்லாம் இருக்கக் கூடாது. பொறந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தோமான்னு இருக்கணும்” என்ற புரட்சிகர வசனத்தோடு ஆரம்பிக்கிறது இதன் ட்ரைலர்.