Advertisment
Presenting Partner
Desktop GIF

ஷாருக்கான் இல்லனா... ஜவான் சந்தேகம் தான் : பான் இந்தியா படம் குறித்து கௌதம் மேனன் கருத்து

பான்-இந்திய திரைப்படங்கள் மற்றும் அதிரடி திரைப்படங்களின் புதிய போக்கு பற்றி பேசிய கௌதம் மேனன் ஷாருக்கான் நடிக்கவில்லை என்றால் ஜவானின் வெற்றி சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளா.

author-image
WebDesk
New Update
Shah Rukh Khan Goutham Menon

கௌதம் மேனன் பான்-இந்திய படங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க : Gautham Menon on pan-Indian films: ‘If Jawan didn’t have Shah Rukh Khan…’

Advertisment

பான் இந்திய நடிகர்கள் மட்டுமல்லாமல் படத்தின் கதை எல்லாருக்கும் பொருந்தும் வகையில் இருப்பது தான் பான் இந்தியா படம் என்று இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். 

தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்ட கௌதம் மெனன் கடந்த 2017-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் இயக்கிய துருவநட்சத்திரம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் மீதான கடனுக்காகத்தான் தான் நடிக்க வந்தேன் என்று கூறி வந்த கௌதம் மேனன், வரும் நவம்பர் 24-ந் தேதி துருவநட்சத்திரம் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதற்கு ஏற்றார்போல் படத்தின் மீதான பணச்சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் படத்தின் ப்ரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் கௌதம்மேனன், பல யூடியூப் சேனலிகளில் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில், கலாட்டா பிளஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பான்-இந்திய திரைப்படங்கள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட கௌதம்மேனன், தனது ஸ்கிரிப்ட் மூலம் ஹீரோக்களை நம்ப வைப்பது எப்படி கடினமாக உள்ளது என்பதைப் பற்றி பேசினார்.

இதில் சிலம்பரசன் கூட இந்த நாட்களில் 'பெரிய' மற்றும் பான்-இந்தியா ஹிரோவாக மாற வேண்டும் என்பதாற்காக ஏதாவது செய்ய விரும்புகிறார் ஆனால், அப்படியொரு படத்தை யாரும் முடிவு செய்து எடுக்க முடியாது. அது எல்லோருக்குமானதா என்பதை படம்தான் தீர்மானிக்கும் என்றும் கவுதம் கருத்து தெரிவித்துள்ளார். அப்படி யென்றால் ஜெயிலர் மற்றும் ஜவான் திரைப்படங்கள் பான் இந்தியா படங்கள் இல்லையா என்று கேட்கப்பட்டது.  

இந்த கேள்விக்கு பதில் அளித்த கௌதம் மேனன், “உங்களிடம் எட்டு முதல் பத்து கேரக்டர்கள் இருந்தும், நாடு முழுவதிலுமிருந்து பல நடிகர்களை நடிக்க வைக்காத வரை... அது பான்-இந்தியா படமாக மாறுமா? ஜவானில் ஷாருக் இல்லையென்றால்... என்ன ஆகியிருக்கும் என்பது எனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.  கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் பெரிய அளவில் எடுக்கப்பட்டதால், அதுவும் ஒரு இந்தியப் படம் என்று கூறியுள்ளார்.

விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதே சமயம் கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஏன் படம் வெளியாகவில்லை என்று கேட்டதற்கு, தமிழ் படங்கள் கேரளாவிலும் பெங்களூரிலும் நன்றாகவே ஓடுகிறது என்று கௌதம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Gautham Menon Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment