scorecardresearch

வேறு ஒருவருக்கு கை மாறிய கெளதம் மேனன் படம்: ஹீரோ, ஹீரோயினும் மாற்றம்

விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்த கதாபாத்திரங்களில், விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Gautham Menon
Gautham Menon

Gautham Menon : தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில், கெளதம் மேனனின் இயக்கத்தில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் ஹீரோ  தனுஷ், இயக்குநர் கெளதம் மேனன் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் ரிலீஸாக பெரும் காரணமாக இருந்த வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் 3 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் கெளதம். அவைகளில் வருண், சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கடுத்து நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்கவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே தெலுங்கில் சூப்பர் ஹிட்டான  ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார் கெளதம். விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்த கதாபாத்திரங்களில், விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இத்திரைப்படம் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது, இத்திரைப்படத்தை புதிய குழு ஒன்று கைப்பற்றியிருக்கிறது. ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ஒரு சில இளம் கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Gautham menon pelli choopulu remake vishnu vishal tamannaah