/tamil-ie/media/media_files/uploads/2019/08/gautham-menon-vetri-maaran-sudha-kongara-vignesh-shivan.jpg)
வெற்றி மாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன்
Gautham Menon, Vetrimaaran, Sudha Kongara, Vignesh Shivan: தமிழ் சினிமாவிலும் பாலிவுட் திரையுலகினரை பின்பற்றி ஒரு விஷயம் நடக்கவிருக்கிறது.
2018-ல் முன்னணி பாலிவுட் இயக்குநர்களான அனுராக் கஷ்யாப், ஸோயா அக்தர், கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜி ஆகிய நால்வரும் இணைந்து, நெட்ஃப்ளிக்ஸிற்கு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற ஆந்தாலஜி சீரியலை இயக்கினர். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர்கள் ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற சிரீஸ் மூலம் மீண்டும் இணைவதாக சொல்லியிருக்கிறார்கள்.
இந்நிலையில், பாலிவுட்டுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் ஒரு ஆந்தாலஜி புராஜெக்டில் இணைகிறார்கள். நெட்ஃபிளிக்ஸ் மூலம் ஒளிபரப்பப்படும், ஒரு ஆந்தாலஜி படத்திற்காக இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கெளதம் மேனனின் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ செப்டம்பர் 6-ம் தேதி திரைக்கு வருகிறது. விக்னேஷ் சிவன் தற்போது எஸ்.கே.17-ல் பிஸியாக உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும், ’அசுரன்’ பட பணிகளிலும், சுதா கொங்கரா சூர்யாவின் ‘சூறரை போற்று’ திரைப்படத்திலும் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.