இளைஞர்களின் ஃபேவரிட் இயக்குநர் கெளதம் மேனன், இறுதியாக ’அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப்படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதில் சிம்பு, மஞ்சிமா மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகியப் படங்கள் தற்போது வெவ்வேறு கட்ட படபிடிப்பில் உள்ளது.
குறிப்பாக இவ்விரண்டு படங்களும் 2 ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் உள்ளது. கோடையின் இறுதியில் இப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது 3-வது ப்ராஜெக்டை முடித்து விட்டார் கெளதம் மேனன்.
ஆனால் இது திரைப்படமல்ல. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘குயின்’ எனும் வெப் சிரீஸ்.
இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், விஜி சந்திரசேகர் சசிகலாவாகவும் நடிக்கிறார்கள். சமுத்திரக்கனி, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
விரைவில் இந்த வெப் சிரீஸ் வெளியாகி, இணையத்தில் ஹிட்டடிக்கும் என்கிறார்கள் கெளதமின் ரசிகர்கள்.