பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வந்த சர்ச்சையை மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே அதிகாலையில் குடிபோதையில் காரை ஓட்டி சென்ற போது காய்த்ரி ரகுராம் போலீசிடம் சிக்கியதாகவும், போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததாகவும் செய்திகள் வேகமாக பரவியது.
காயத்ரி ரகுராம் விளக்கம்
நேற்று மாலை முதல் பரவி வரும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி விளக்கம் அளித்துள்ளார். அதில், “தாம் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என்னுடன் பணியாற்றும் ஒருவரை அவர் இடத்தில் டிராப் செய்ய சென்றிருந்த சமயம் போலீசார் வழக்கமான வாகன சோதனைக்காக எனது வண்டியையும் நிறுத்தினார்கள்.
என்னிடம் லைசன்ஸ் இல்லாத காரணத்தால் எனக்கு அபராதம் விதித்தனர், பின்பு என்னிடம் ஆவணம் உள்ளது என்றும் அதனை செக் செய்துக் கொள்ளலாம் என்றும் கூறினேன். பின்னர் அவர்களும் என் ஆவணங்களை சரிபார்த்தார்கள். அவர்கள் பணியின் மீது கொண்டுள்ள பற்றை நான் பாராட்டவும் செய்தேன்.
ஆனால் இதையெல்லாம் அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் திரித்து எழுதியுள்ளார். உண்மையில் அவரை தான் போலீஸ் பிடித்தது. என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று அவர் முடிவு செய்து விட்டார். எழுதுபவர்கள் எழுதட்டும் நான் முன்னேறிக்கொண்டு செல்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.