Advertisment

”உனக்கு இறக்கைகள் கொடுத்து அதனடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்” - ஜெனிலியா உருக்கம்!

வாழ்க்கை கடினமானது என்று நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால் நீ கடுமையானவன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Genelia D'souza birthday wishes for riaan

Genelia D'souza

Genelia D'Souza : நடிகர் ரித்தீஷ் தேஷ்முக், நடிகை ஜெனிலியா டிஸோஸா ஆகியோரின் மூத்த மகன் ரியான் தனது 5 வது பிறந்தநாளை கொண்டாடுகிறான்.  இதை முன்னிட்டு சில படங்களுடன், ரியானுக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஜெனிலியா.

Advertisment

 

View this post on Instagram

 

Dearest Riaan, Every parent says “I don’t want him to grow up, I want to freeze this age forever”.. But I don’t.. I want to enjoy every year of yours, I want to see you grow into a fine young man, I want to give you wings to fly and I’d like to be the wind beneath those wings. I want to tell you that life is tough but you are tougher, I want you to always believe in yourself no matter what happens cause I will always believe in you.. Apart from everything I want and I wish for you, the one thing I never want to fail to let you know, is that I love you so so so much and you are the greatest thing that happened to me.. There is nothing I’d rather see than your smile and nothing I’d rather hear than your laughter. For all the things my hands have held, the best by far is you. Happy Birthday to the little boy who made me a Mom- My First Born ❤️

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

"அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் “அவன் வளரவே வேண்டாம். இந்த வயதிலேயே எப்போதும் இருக்கட்டும்” என்று கூறுவார்கள். ஆனால் நான் அப்படி விரும்பவில்லை.. உன்னுடைய ஒவ்வொரு ஆண்டையும் நான் ரசிக்க விரும்புகிறேன், நல்ல இளைஞனாக நீ வளருவதை பார்க்க விரும்புகிறேன். நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன். வாழ்க்கை கடினமானது என்று நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால் நீ கடுமையானவன். என்ன நடந்தாலும் நீ எப்போதும் உன்னை நம்ப வேண்டும். நான் எப்போதும் உன்னை நம்புகிறேன்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெனிலியா.

அதோடு, “நான் விரும்பும் எல்லாவற்றையும் தவிர, வேறு ஒன்றை உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்னவென்றால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், நீ எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விஷயம் .. என்னை அம்மாவாக்கிய சிறு பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - என் முதல் பிறப்பு” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

வார இறுதியில் ரியானுக்காக ரித்தீஷ் மற்றும் ஜெனெலியா ஒரு நட்சத்திர விருந்தை நடத்தினர். இதில் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களது மகள் ஆராத்யா, ராணி முகர்ஜி அவரது மகள் ஆதிரா, அர்பிதா கான் மற்றும் மகன் அஹில், ஈஷா தியோல் அவரது மகள் ராத்யா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Riteish Deshmukh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment