Advertisment
Presenting Partner
Desktop GIF

இது என் மனதிற்கு நெருக்கமான படம்: ஜெயம் ரவி ஓபன் டாக்

ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார்.

author-image
WebDesk
New Update
jayam ravi1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும்  ஜெயம் ரவி, அவர் நடித்த  'பிரதர்' என்ற படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

Advertisment

கைவசம் நிறைய படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி  கணேசன் தயாரித்துள்ள 'ஜீனி' படத்தில் அவர் நடித்துள்ளார். 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.  இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில்  பேட்டி ஒன்றில் பேசிய ஜெயம் ரவி ஜீனி படம் பற்றி பேசினார், "ஜீனி படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் பேண்டஸி மற்றும் எமோஷன் கலந்த கலவையாகும்.

இந்த படத்தில் காமெடி மற்றும் காதல் ஆகியவை வித்தியாசமான கோணத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தின் சுவாரசியமான கதைக்காக இந்த படம் பான் இந்தியா அளவில்  ரசிகர்களை கவரும்" என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment