விஜய் – த்ரிஷா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ரீ-ரிலீசிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது கில்லி திரைப்படம்.
ஆங்கிலத்தில் படிக்க : Ghilli box office collection: Vijay, Trisha’s romantic actioner breaks Avatar, Sholay records, emerges as highest-grossing re-release of the century
தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஒக்கடு என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஆஷித் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ50 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்த இந்த படம், விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.
தேர்தலை முன்னிட்டு புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், கில்லி படம் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீசிலும் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், படம் வெளியீட்டுக்கு முன்பாகவே உலகளாவிய முன்பதிவில் சுமார் ரூ3 கோடி வசூலித்துள்ளது.
இந்திய அளவில் ரீ-ரிலீசில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் கில்லி படத்திற்கு பெரிய ஆதரவு கிடைத்து வரும் நிலையில், படம் வெளியாகி 9 நாட்களில் ரூ20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கூறியுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் வசூல் சாதனையை கில்லி முறியடித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு அவதார் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரூ18 கோடி வசூலித்திருந்தது. இந்த சாதனையை தற்போது கில்லி முறியடித்துள்ளது. ஏற்கனவே பாலிவுடு் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஷோலே படத்தை ரீரிலீஸ் செய்தபோது அந்த படம் ரூ13 கோடி வசூலித்திருந்தது. இந்த இரு படங்களின் சாதனையை முறியடித்துள்ள கில்லி திரைப்படம் 2024-ம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இதில் முதலிடத்தில் கேப்டன் மில்லர் படமும், 2-வது இடத்தில் அயலான், 3-வது இடத்தில் லால் சலாம் ஆகிய படங்கள் உள்ளன. இதில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் முதல் நாளில், ரூ3.55 கோடி வசூலித்த நிலையில், கில்லி திரைப்படம் முதல் நாளில் 4.75 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“