/indian-express-tamil/media/media_files/OJqJVDcUpt3iIPWtghmu.jpg)
GOAT box office collection day 2
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (செப்.5) திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தி கோட் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. முன்னதாக விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடியை வசூலித்திருந்தது.
Thalapathy Takeover at the BoxOffice 🔥🔥 G.O.A.T
— Archana Kalpathi (@archanakalpathi) September 7, 2024
ஆனால் 2-வது நாளில் திரைப்படம் 43% சரிந்து பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.24 கோடியை ஈட்டியுள்ளது.
இருப்பினும் இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகளுக்கு அதிக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வருடம் தமிழில் முதல் மற்றும் இரண்டாவது நாளில் அதிக வசூல் செய்த படமாக விஜய்யின் தி கோட் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.