வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (செப்.5) திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தி கோட் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ. 44 கோடி வசூலித்தது, ஆனால் வெள்ளியன்று ரூ 25.5 கோடியாக கணிசமான வீழ்ச்சியை சந்தித்தது.
இருப்பினும், சனிக்கிழமையன்று படம் ரூ.33 கோடியைக் குவித்தது.
தி கோட் படத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் அடிப்படையில், மூன்றாவது நாள் வசூல் நிலவரத்தை Sacnilk வெளியிட்டுள்ளது. அதன்படி, விடுமுறை நாளான விநாயகர் சதுர்த்தி அன்று, படம் இந்தியாவில் சுமார் 33 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் ரூ.29.1 கோடி, தெலுங்கு வெர்ஷனில் ரூ.1.75 கோடி மற்றும் வடமாநிலங்களில் ரூ.2.15 கோடி வசூலும் அடங்கும்.
இதன் மூலம் வெளியான மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. அங்கும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளியான மூன்றே நாட்களில் ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“