தமிழகத்தில் காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஜய்யின் கோட் படத்தில் இருந்து மீண்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை (GOAT – Greatest Of All Time) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாடத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. துணிவு படத்தின் அதிகாலை காட்சியின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை தொடர்ந்து தமிழக அரசு காலை காட்சிக்கு 7,8 மணி காட்சிக்குஅனுமதி வழங்குவதை நிறுத்தி இருந்தது.
காலை 9 மணி முதல் தான் சிறப்பு காட்சிகள் வழங்கப்படும் எனக் கூறியது. இந்நிலையில் விஜய்யின் 'கோட்' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கோயம்பத்தூரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கம் காலை 7 மணிக்கும், 7.40 மணிக்கும் முன்பதிவுவை தொடங்கியுள்ளது.
அரசும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“