விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா? படம் எப்படி உள்ளது?
Reqad In English: GOAT Movie Review: Venkat Prabhu film wonderfully champions Vijay, but misses on other fronts
பயங்காரவாத எதிர்ப்பு குழுவில் இருக்கும் காந்தி மற்றும் அவரது நண்பர்கள், ஒரு கடத்தல் கும்பலின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதில் இருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பது தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் கதை.
இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை ஒரு நடச்த்திரம் என்ற அடிப்படையில் இல்லாமல், ஒரு ஹீரோவாக வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதை பழைய பஞ்சாங்கத்தை புரட்டி போடுவது போன்ற உணர்வையே தருகிறது. மொத்த படமும், விஜய்யுடன் இணைந்து செயல்படும் வயது குறைந்த விஜய் என்ற ஒரு முக்கிய யோசனையை மட்டுமே வைத்து நகர்த்தப்பட்டள்ளது.
நசீர் (ஜெயராம்) தலைமையில் சுனில் (பிரஷாந்த்), அஜய் (அஜ்மல்), கல்யாண் (பிரபுதேவா) மற்றும் காந்தி ஆகிய நான்கு பேர் கொண்ட பயங்கரவாத எதிர்ப்புக்குழு உலகை பாதுகாக்க செல்லும்போது, அவர்களது உள்நாட்டுப் பிரச்சனைகள்தான் அவர்களுக்கு அதிக சவாலாக உள்ளது. அதேபோல் பல உளவுப் படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு இந்த படம் எந்த ஒரு புது அனுபவத்தையும் கொடுக்கவில்லை. வெங்கட் பிரபு எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிந்த சில புத்திசாலித்தனமான காட்சிகள் மூலம் எல்லாவற்றையும் கொடுக்க முயற்சித்துள்ளார். அதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார்.
பல வழிகளில், மங்காத்தாவுக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் தைரியமான படம் கோட். படத்தின் காட்சிகள் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப காட்சிகளிலும் குறிப்பாக விஜய் வயதைக் குறைக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர் செய்திருக்கும் வித்தை பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக வயதான விஜய் கேரக்டர் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது. ஏனென்னால் வயது குறைந்த விஜயான ஜீவன், தனது திறமையாக வெளிப்படுத்துகிறார்கள்.
வி.எப்.எக்ஸ் காட்சிகள் சில இடங்களில் சிறப்பாக அயைமவில்லை. கார்கள் பெரிதாக்கப்படுகின்றன, பைக்குகள் சறுக்குகின்றன, மற்றும் தோட்டாக்கள் சீறிப்பாய்கின்றன, ஆனால் இந்த ஆக்ஷன் காட்சிகளின் நடுவில் இருப்பது போன்ற உணர்வை நமக்குத் தருவதில்லை. நிறைய காட்சி குழப்பம் உள்ளது. பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, லைலா, இரட்டை வேடங்களில் அசத்தியுள்ள விஜய் என எல்லோரும் தங்கள் கேரக்டரை சிறப்பாக கொண்டு வருகிறார்கள்.
புதுமுகம் மீனாட்சி சௌத்ரி கூட ஒரு கண்ணியமான கேரக்டரில் வந்து தனது கேரக்டருக்கு நியாயம் செய்கிறார், ஜீவனாக வரும் விஜய் மிகவும் வேடிக்கையாக இருக்கிறார், மேலும் ஒரு சூப்பர் ஸ்டார் அந்த அந்தஸ்தில் இருந்து இறக்கிவிட்டால் என்ன செய்வார்கள் என்பதை இந்த படம் மீண்டும் ஒருமுறை காட்டுகிறது. நிச்சயமாக, விஜய் தான் சிறப்பாகச் செய்ததைச் மீண்டும் ஒருமுறை செய்திருக்கிறார். காந்தியின் கேரக்டர்கள் இதுவரை விஜய் பல படங்களில் செய்திருக்கிறார். ஆனால் ஜீவன் என்ற கேரக்டரில் அவர் உண்மையிலேயே வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ள விஜய், அதற்காக தனது கடைசி கட்ட படத்தில் சிறப்பான கேரக்டரை தேர்வு செய்துள்ளார். அதேபோல் இந்த படத்தில் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் ஹிட் அண்ட் மிஸ் காட்சிகளாக உள்ளது. அதேபோல் படத்தில் ஏராளமான காட்சிகள் ரசிகர்கள் கூட்டத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஒரு நிமிடத் திருப்பமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற வெங்கட் பிரபு அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
சூழ்ச்சி, சஸ்பென்ஸ், காமெடி, உணர்வு மற்றும் மாஸ் மசாலா ஆகியவற்றின் சரியான கலவையை உடைத்துள்ள வெங்கட் பிரபு, அதை மிக நுட்பமாக கையாண்டுள்ளார். மேலும் தனது முந்தைய படங்களில் இருந்து பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.மாநாடு போலல்லாமல், கோட் மிகவும் எளிமையான படம் என்பதால், இந்த அலைச்சல் முக்கியமாக நிகழ்கிறது. தொழில்நுட்பம் தான் புதுமை காரணி, கதை அல்ல. இது வெங்கட் பிரபு தன்னை கொஞ்சம் புகழ்ந்துகொள்ளலாம். படத்தில் தொழில்நுட்பம் உள்ளது, ஆனால் அது மட்டும் புதுமையாக இருக்க முடியாது, இல்லையா? படம் முழுக்க ஈடுபாட்டுடன் இல்லாத எளிமையான காட்சிகள் சற்று சுமையாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, காந்திக்கு தகுதியான எதிரியாகக் கருதப்படும் மோகனின் கேரக்டர் சரியாக எழுதப்படவில்லை. விசில் போடு மற்றும் சின்ன சின்ன பாடல்கள் தவி மற்ற பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. கோட் படம் உண்மையில் விஜய்யின் அனைத்து விஷயங்களையும் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரது நடனம், ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை நேரம், பாதிப்பு, காதல் வசீகரம் மற்றும் சிரமமில்லாத சூப்பர்ஸ்டார் அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. அதே சமயம் வெங்கட் பிரபு கதை மற்றும் திரைக்கதையில் சற்ற கவனம் செலுத்தியிருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.