/indian-express-tamil/media/media_files/1cu1YN2mhVAOmHsvj5yB.jpg)
Vijay GOAT Movie Update
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இதில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சென்னை, ஐதராபாத், கேரளா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு ஒருவழியாக ஷூட்டிங்கை நிறைவு செய்து தற்போது பின்னணி பணிகளில் பிசியாக உள்ளது.
இந்நிலையில்,தி கோட் திரைப்படத்தில் விஜய்க்கான விஎஃப்எக்ஸ் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக, வெங்கட் பிரபு தன்னுடைய X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Successfully completed the VFX work with @actorvijay na at @lolavfx can’t wait for the output!!! #TheGreatestOfAllTime#TheGOAT#aVPhero@archanakalpathi@aishkalpathi@hariharalorvenpic.twitter.com/6BL29XOoXK
— venkat prabhu (@vp_offl) May 18, 2024
அமெரிக்காவில் உள்ள லோலா என்கிற வி.எப்.எக்ஸ் நிறுவனம் தான் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிறுவனம் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.