Kerala Goat Movie Ticket Price: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று (செப்.5) வெளியானது.
இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோட் படம் இன்று காலை 9 மணிக்கும், மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கும் வெளியானது.
இதனால் தமிழகத்தின் எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அதிகாலை காட்சி பார்க்க விஜய்யின் ரசிகர்கள் குவிந்தனர்
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையிலுள்ள கெளமாலையா தியேட்டரில், அதிகாலை 4 மணிக்கு கோட் படம் பார்க்க தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் 1200 ரூபாய் முதல் 2000 வரை கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.
இதனால் உள்ளூர் ரசிகர்கள் படம் பார்க்க முடியாத சூழல் உருவானது.
தியேட்டரின் உரிமையாளரே ஒரு டிக்கெட்டின் விலையை 1200 ரூபாய் முதல் 2000 வரை விற்பதாகவும், அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தை ஒட்டி இருக்கும் கேரள மாநிலத்திலுள்ள தியேட்டர்களில் கோட் படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க - தமிழகத்திலேயே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கேரள ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“