வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் படமான The Greatest of All Time (கோட் - GOAT) ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘கோட்’ படத்தின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Here’s the revised runtime of GOAT: Is the Vijay-Venkat Prabhu film going the Mankatha way?
விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 22-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கோட் படம் வெளியாக உள்ளது. விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ளதால், கோட் படம் விஜய்யின் கடைசி படமாக அமைந்துள்ளது. இந்த கோட் படத்தைப் பற்றி படக்குழு சமீபத்தில் வெளியிட்ட செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் மொத்தம் 179.39 நிமிடங்கள் ஓடும் என முந்தைய அப்டேட்டில் தெரியவந்துள்ளது. இது ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் மற்றும் பிகில் படங்களின் 179 நிமிட நேர படங்களுடன் ஒத்துப்போனது.
இருப்பினும், சமீபத்திய தகவல் என்னவென்றால், கோட் படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது, மேலும், கோட் படத்தின் நேரம் 183.14 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நேரம் அதிகரிப்பு பிரபலமான ப்ளூப்பர் ரீல்களை மட்டுமே குறிக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இது பொதுவாக வெங்கட் பிரபு படங்களில் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ப்ளூப்பர் வீடியோக்களில் ஒன்று சந்தேகமே இல்லாமல் வெங்கட் பிரபுவின் மற்றொரு திரைப்படமான மங்காத்தாவிலிருந்து வந்தது. இது படத்தின் நட்சத்திரமான அஜித் குமாரை புதிய மற்றும் விளையாட்டுத்தனமான வெளிச்சத்தில் காட்சிப்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கோட் படத்தின் ப்ளூப்பர் ரீல் முதன்மைப்படுத்தப்படலாம் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஒரு நிகழ்வில், இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் படத்தின் ஸ்பெஷல் நான்காவது சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார், மேலும் இது யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என்று யூகங்கள் உள்ளன. கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா ஜெயராம், மீனாட்சி சவுத்ரி மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.