/indian-express-tamil/media/media_files/2025/09/17/gbu-2025-09-17-09-36-15.jpg)
ஐகோர்ட் தடை, இளையராஜா அவமதிப்பு நோட்டீஸ்... நெட்ஃபிலிக்ஸில் இருந்து தூக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்து வசீகரமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரியா வாரியர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ மற்றும் ‘இளமை இதோ இதோ’ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளியாகும் படங்களில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுவது ட்ரெண்டாகி வரும் நிலையில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தனது அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தனது பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் இருந்து ரூ. 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இளையராஜா தரப்பில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இடைக்கால உத்தரவை மீறி, இளையராஜா பாடல்கள் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிபந்தையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த மே 8-ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஓடிடி தளத்திலிருந்து ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு வேளை இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் காரணமாகதான் நீக்கப்பட்டுள்ளதா? என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us