குஷ்பூ ரீ- என்ட்ரி ஆன முக்கிய சீரியல் திடீர் நிறுத்தம்: ஆனா இதற்கு காரணம் குஷ்பூ இல்லை!
Gokulathil Seethai tamil news: 'கோகுலத்தில் சீதை' சீரியல் திடீர் நிறுத்தத்திற்கு நடிகை குஷ்பூ ஒரு காரணமாக இருக்கலாம் என சிலர் குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான உண்மைக் காரணம் வெளிவந்துள்ளது.
Gokulathil Seethai tamil news: 'கோகுலத்தில் சீதை' சீரியல் திடீர் நிறுத்தத்திற்கு நடிகை குஷ்பூ ஒரு காரணமாக இருக்கலாம் என சிலர் குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான உண்மைக் காரணம் வெளிவந்துள்ளது.
Actress Kushboo latest tamil news: தமிழ் நடிகைகளில் முழுநேர அரசியல்வாதியாக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. வெள்ளித்திரையில் அவ்வப்போது தோன்றும் இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களுள் ஒன்றான 'கோகுலத்தில் சீதை' சீரியலில் நடிகை குஷ்பூ சமீபத்தில் தான் நடிக்க தொடங்கினார்.
Advertisment
இந்த சீரியலில் மங்களம் டாக்டர் என்கிற ரோலில் நடித்து வரும் இவருடன், அர்ஜூனாக நந்தாவும், வசுந்தரவாக ஆஷா கௌடாவும் நடித்து வருகின்றனர். இந்த அர்ஜுன் வசுந்தரா ஜோடிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது.
Advertisment
Advertisements
தற்போது கோகுலத்தில் சீதை சீரியல் திடீரென நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்த சீரியல் ஒளிபரப்பாக இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஆஷா கௌடாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் ஷூட்டிங் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் கோகுலத்தில் சீதை சீரியல் ஒளிபரப்பை ஜீ தமிழில் நிறுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி, "கோகுலத்தில் சீதை தொடர் ஒளிபரப்பு நிறுத்தப்படுவது உண்மைதான், ஆஷா கௌடாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதும் உண்மைதான். இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று என்ற தகவல் உண்மை இல்லை. அவர் இன்னும் இரண்டு தினங்களில் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார்" என கூறப்பட்டுள்ளது.
இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதற்கு சிலர் நடிகை குஷ்பூ ஒரு காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது சீரியல் நிறுத்தப்பட்டதற்கான உண்மைக் காரணம் வெளிவந்துள்ளது.