80வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தியத் திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவு மற்றும் சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியத்தில் வெளியான படம் மொழிகளைக் கடந்து ஹிட் ஆனது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டி சென்றுள்ளது. இப்பாடலுக்கு கீராவாணி இசையமைத்திருந்தார்.
இந்தப் பிரிவுக்கு 5 பாடல்கள் இடம்பெற்ற நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆங்கிலம் உள்பட வேறு மொழிப் படங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை தட்டிச் சென்றது. ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
சிறந்த பாடல் - மோஷன் பிக்சர்
"கரோலினா" - வேர் தி கிராடாட்ஸ் சிங்
"சியாவோ பாப்பா" - கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ
"ஹோல்ட் மை ஹேண்ட்" - டாப் கன்: மேவரிக்
"லிஃப்ட் மீ அப்" - பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்
"நாட்டு நாடு" - ஆர். ஆர். ஆர்
அதேபோல், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சிறந்த சீரிஸ் என்ற பரிவில் விருது வென்றுள்ளது. ஹவுஸ் ஆஃப் தி டிராகன் அமெரிக்கன் பேன்டசி சீரிஸ் ஆகும். கொலின் ஃபாரெல் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். தி இனிஷெரின் பன்ஷீஸ் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார். Everything Everywhere All at Once படத்தின் கதாநாயகி மைக்கேல் யோ சிறந்த நடிகை பரிவில் வெற்றி பெற்றார். இப்படம் துணை நடிகை பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆர். ஆர். ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத மொழி படப் பிரிவில் அர்ஜென்டினா, 1985 என்ற படம் விருது வென்றுள்ளது. 5 படங்களில் பரிந்துரைக்கப்பட்டதில் அர்ஜென்டினா படம் வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/