Advertisment
Presenting Partner
Desktop GIF

கோல்டன் குளோப்ஸ் 2025: தவறவிட்ட இந்திய திரைப்படம்... விருதுகளை அள்ளிய படங்கள், நடிகர்கள் பட்டியல்

ஒரு இந்திய திரைப்படம் கோல்டன் குளோப்ஸ் விருது பெற்று 43 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போதுவரை அந்த ஏமாற்றம் நீடித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Golden Globes 2025

82வது கோல்டன் குளோப்ஸ் 2025 கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றதுஇ ஹாலிவுட் சினிமாவின், சிறந்த படைப்பாளர்கள் 2024 –ல் வெளியான சிறந்த படைப்புகளை கொண்டாடத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் விருதுகள் என்று அழைக்கப்படும், இது பல விஷயங்களுக்கு முன்னோடியாக செயல்படுகிறது. அகாடமி விருதுகளில், கோல்டன் குளோப்ஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. 

Advertisment

Read In English: Golden Globes 2025 complete winners list: The Brutalist, Shogun and Emilia Perez win top honours; All We Imagine As Light fails to bag a Golden Globe

82வது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை நடிகையான நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியை ஒரு பெண் தனியாக தொகுத்து வழங்குவது முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில், 2024-ம் ஆண்டு வெளியான, பிரஞ்சு மியூசிக்கல் க்ரைம் காமெடி படமான எமிலியா பெரெஸ், சிறந்த மோஷன் பிக்சர் (இசை அல்லது காமெடி), சிறந்த இயக்குனர் (ஜாக் ஆடியார்ட்), சிறந்த நடிகை (கர்லா சோபியா காஸ்கன்) மற்றும் சிறந்த துணை நடிகை (ஸோ சல்டானா மற்றும் செலினா கோம்ஸ்) உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள, கர்லா சோபியா காஸ்கன், முன்னணி திரைப்பட கேரக்டரில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திருநங்கை நடிகர் என்ற சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். ஏ24 (A24) தயாரிப்பில், பிராடி கார்பெட் இயக்கத்தில் வெளியான தி ப்ருட்டலிஸ்ட் (The Brutalist) திரைப்படம் 7 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.  மேலும் ரால்ப் ஃபியன்னெஸ் நடிப்பில் வெளியான தி கான்க்ளேவ் திரைப்படம் 6 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,

Advertisment
Advertisement

அதேபோல், தொலைக்காட்சியில், மிகவும் விரும்பப்படும் எஃப்எக்ஸ் தொடரான தி பியர் 5 விருதுகளுக்கு பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மற்றொரு எஃப்எக்ஸ் தொடரான ஷோகன் மற்றும் ஹுலுவின் ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் 4 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச பட்டங்களைத் தவிர, இந்தியாவின் பெண் இயக்குனர் பாயல் கபாடியாவின் இயக்கத்தில் வெளியான ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் 2 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, இந்தியா திரைத்துரையில், வரலாற்றை உருவாக்கும் விளிம்பில் உள்ளது.

கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா நடித்த இப்படம் சிறந்த ஆங்கிலம் அல்லாத சிறப்பு விருதுகளை இழந்தது. பாயல் சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றுள்ளார். இரண்டும் கடுமையாகப் போட்டியிட்ட பிரிவுகளாக இருந்தாலும், ஜாக் ஆடியார்டின் இயக்கத்தில் வெளியான எமிலியா பெரெஸ் திரைப்படத்திற்க்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. இதனால் கோல்டன் குளோப் விருதில் இந்தியாவின் 43 ஆண்டுகால கனவு மீண்டும் ஏமாற்றத்தில் முடிந்தது. ஆனால், பயல் பாயல் கபாடியா வெற்றி பெறவில்லை என்றாலும், கோல்டல் குளோப் விருதில் சிறந்த இயக்குனர் விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்ட முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.

82வது கோல்டன் குளோப்ஸ் 2025 விருது பெற்றவர்கள் முழு விபரம்

திரைப்படத்தில் துணை வேடத்தில் சிறந்த நடிகை - ஜோ சல்டானா (எமிலியா பெரெஸ்)

தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை (இசை அல்லது நகைச்சுவை) - ஜீன் ஸ்மார்ட்  (ஹேக்ஸ்)

திரைப்படத்தில் துணை வேடத்தில் சிறந்த நடிகர் - கீரன் கல்கின் (எ ரியல் பெயின் )

தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகர் (நாடகம்) - ஹிரோயுகி சனாடா (ஷோகன்)

தொலைக்காட்சியில் சிறந்த துணை நடிகை - ஜெசிகா கன்னிங், (பேபி ரெய்ண்டீர்)

தொலைக்காட்சியில் சிறந்த துணை நடிகர் - தடானோபு அசானோ (ஷோகன்)

தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகர் (இசை அல்லது நகைச்சுவை)- ஜெர்மி ஆலன் ஒயிட் (தி பியர்)

சிறந்த திரைக்கதை (திரைப்படம்) - பீட்டர் ஸ்ட்ராக்கன் (கான்க்ளேவ்)

தொலைக்காட்சியில் சிறந்த ஸ்டாண்டப் காமெடி - அலி வோங், (அலி வோங்: சிங்கிள் லேடி)

சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - எமிலியா பெரெஸ்

சிறந்த இயக்குனர் (திரைப்படம்) - பிராடி கார்பெட் (தி ப்ரூடலிஸ்ட்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    Cinema Update
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment