உலகளவில் 4-வது இடத்தில் 'குட் பேட் அக்லி'; படம் பார்த்ததில் புதிய சாதனை; 4-வது நாள் வசூல் நிலவரம்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் உள்நாட்டு வசூல் ரூ. 84.50 கோடியை எட்டியுள்ளது, மேலும் ஏற்கனவே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் உள்நாட்டு வசூல் ரூ. 84.50 கோடியை எட்டியுள்ளது, மேலும் ஏற்கனவே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Good bad Ugly

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்,தனது படங்கள் 'மசாலா' குறைவாகவும், ரசிகர்களுக்கு 'செய்தி' அதிகமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு தசாப்தம் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்தை கடந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக, அஜித் எச்சரிக்கையை காற்றில் வீசி, தனது நட்சத்திர அந்தஸ்தை கொண்டாடும் ஒரு படத்தில் நடித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Good Bad Ugly box office collection day 4: Ajith Kumar-starrer earns Rs 150 cr worldwide, books 4th spot on global most watched films list

மேலும் அவரது பல வெற்றிப்ப்படங்களின் ரெப்ரன்ஸை நிறைவாக கொடுத்துள்ள, ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி அதிக வசூல் செய்த அஜித் படமாக சரியான பாதையில் உள்ளது, படம் வெளியாகி 4 நாட்களை கடந்துவிட்டாலும், படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 13) குட் பேட் அக்லி இந்தியாவில் ரூ.20.5 கோடி (நிகரம்) வசூலைப் பதிவு செய்ததாக வர்த்தக வலைத்தளமான சாக்னில்க் தெரிவித்துள்ளது.

அஜித்தின் முந்தைய படமான 'விடாமுயற்சி' முதல் நாளில் இதேபோன்ற எண்ணிக்கையில் வெளியான போதிலும், 2 ஆம் நாளிலிருந்து பெரும் சரிவைச் சந்தித்தது, கடைசிவரை அந்த சரிவில் இருந்து மீளவே இல்லை. வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு, விடா முயற்சி படம் ரூ. 36.25 கோடியை வசூலித்தது, அதனுடன் ஒப்பிடுகையில், அதே மூன்று நாள் வார இறுதி காலத்தில், குட் பேட் அக்லி மொத்தம் ரூ. 55.25 கோடியை வசூலித்துள்ளது. குட் பேட் அக்லியின் உள்நாட்டு வசூல் ரூ. 84.50 கோடியை எட்டியுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் ஏற்கனவே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது. காம்ஸ்கோரின் கூற்றுப்படி, இந்த படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் 4-து இடத்தில் உள்ளது, மேலும் டிராப், வார்ஃபேர், எ வொர்க்கிங் மேன் மற்றும் டிஸ்னியின் ஸ்னோ ஒயிட் போன்ற படங்களை முந்தியுள்ளது. 'குட் பேட் அக்லி' படத்திற்கு உண்மையிலேயே சாதகமாக இருந்தது அவரது ரசிகர்களுக்கான படமாகவும், நேர்மறையான விமர்சனங்களும் தான் காரணமாக உள்ளது.

இருப்பினும், திரையரங்கு பார்வையாளர்களின் ஆதரவு தயாரிப்பாளர்களுக்கு வெற்றியை கொண்டாடும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது, சமீபத்தில், இயக்குனர் ஆதிக் மற்றும் குட் பேட் அக்லி நடிகர்கள் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் சுனில் ஆகியோர் ஹைதராபாத்தில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர். சமீபத்திய பான்-இந்திய பிளாக்பஸ்டர் புஷ்பா 2: தி ரூல் படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தின் மூலம் தமிழில் பிரம்மாண்டமாக அறிமுகமாகியுள்ளது.

படத்தின் மற்றொரு சிறப்பம்சம் வார இறுதியில் அதிகரித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை. சனிக்கிழமை எண்ணிக்கை 61.53% ஆக இருந்தபோது, படம் 69.13% ஆக்கிரமிப்பைப் பெற முடிந்தது, மேட்டினி, மாலை மற்றும் இரவு காட்சிகளில் 74.16%, 76.79% மற்றும் 73.46% என ஈர்க்கக்கூடிய வரவேற்பைப் பெற்றது. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பின் பிரதிபலிப்பாகும். பெரும்பாலான வசூல் படத்தின் தமிழ் பதிப்பிலிருந்தே வருகிறது,

மேலும் தெலுங்கு பதிப்பு 18.43% மட்டுமே வசூலித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அதன் நீட்டிக்கப்பட்ட தொடக்க வார இறுதியில் கிட்டத்தட்ட ரூ.4 கோடி வசூலித்தது. தமிழ் புத்தாண்டு தினமான இன்றும் விடுமுறை என்பதால், குட் பேட் அக்லி ஐந்தாவது நாளில் வலுவான வெற்றியைப் பெறும் என்றும், இந்தியாவில் ரூ.100 கோடி (நிகரம்) வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விடாமுயற்சியின் மிகப்பெரிய சரிவு திங்கட்கிழமை ஏற்பட்டது (ரூ.3.2 கோடி), மேலும் குட் பேட் அக்லி இந்த சரிவைத் தவிர்க்க முடிந்தால், அது படத்திற்கு நல்லதாக இருக்கும்,

கூடுதலாக, பள்ளி விடுமுறைகள் அமலில் உள்ள நிலையில், மே 1 வரை எந்த பெரிய படமும் திரைக்கு வராததால், குட் பேட் அக்லி மாத இறுதி வரை சுமூகமாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படங்களின் முதல் 10 பட்டியலில் இந்தப் படம் இடம் பெற்றுள்ளது. அஜித்தின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அவர் தனது குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக்குடன் ஏ.கே. 64 படத்திற்காக மீண்டும் இணைவார் என்ற தகவல்கள் வந்துள்ளன.

கார்த்திக் சுப்பராஜ், பிரசாந்த் நீல் மற்றும் சிவா போன்ற திரைப்பட இயக்குனர்களுடனும் அவர் பணியாற்றக்கூடும் என்ற ஊகங்களும் உள்ளன. குட் பேட் அக்லி இறுதியாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அஜித் குமார் தனது அடுத்த படம் குறித்த புதுப்பிப்பை மிக விரைவில் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: