அஜித் ரசிகர்களை கவர்ந்த குட் பேட் அக்லி: முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

ஆதிக் சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் முன்பதிவில், ரூ. 18 கோடி வசூலித்தது.

ஆதிக் சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் முன்பதிவில், ரூ. 18 கோடி வசூலித்தது.

author-image
WebDesk
New Update
Ajith_1c6e1c

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா இணைந்து நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது,

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Good Bad Ugly Box Office Collection Prediction Day 1: Ajith Kumar’s film to open at Rs 30 crore

மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குடு் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, இந்த ஆண்டின் அஜித் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் குட் பேட் அக்லி.

விடா முயற்சி திரைப்படம் பாக்ஸ்ஆபீஸில் மோசமான வசூலை பெற்ற நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே, சாக்னில்கின் இணையதளத்தின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, மாலை 5:30 மணி நிலவரப்படி குட் பேட் அக்லி ரூ.16.64 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.15 கோடி முன் விற்பனையிலும், இந்தியா முழுவதும் ரூ.3 கோடி கூடுதலாகவும் வசூலித்துள்ளது.

Advertisment
Advertisements

புஷ்பா திரைப்படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்தப் படம் முதல் நாளில், ரூ.30 கோடிக்கு மேல் வசூலாகும் என்று வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ளனர், இது அஜித்தின் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படமான துணிவு படத்தின்  ஓப்பனிங்கை விட அதிகமாக இருக்கும், ஆனால் அவரது கடைசி வெளியீடான விடாமுயற்சியை விடக் குறைவு.

அஜித்தின் முந்தைய வெளியீடான விடாமுயற்சி வெளியான நாளில் ரூ.31.4 கோடி வசூலித்தது. இருப்பினும், அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவைச் சந்தித்தது. அதேசமயம், அவரது 2024 திரைப்படமான துணிவு முதல் நாளில், ரூ.24.4 கோடிக்கு வெளியிடப்பட்டது. இந்தப் படமும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. சக்னில்க் கருத்துப்படி. குட் பேட் அக்லி ஒட்டுமொத்த தமிழ் வசூலை 77.14% கண்டுள்ளது. இந்தப் படம் தமிழில் சுமார் 2600 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தெலுங்கில், சுமார் 500 காட்சிகளைக் கொண்டுள்ளது.

அஜித் குமாரைத் தவிர, இந்தப் படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், கார்த்திகேய தேவ், பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, பிரசன்னா, ரகு ராம், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடித்துள்ளனர்.

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: