ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று(ஏப்ரல் 10) வெளியாகிறது. நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் குவிந்தனர். அஜித்தின் முந்தைய படங்களில் பிரபலமான பஞ்ச் வசனங்கள், சமூக வலைத்தளங்களில் பிரபலமான அதிரடி வசனங்கள் என பல விஷயங்கள் இருப்பதால் குட் பேட் அக்லி மீது கொஞ்சம் கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருக்கிறது.
வார இறுதி நாட்களில் குட் பேட் அக்லியை பார்க்கவும் ஏகப்பட்ட பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகவுள்ள நிலையில் நேற்றிரவு முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த படம் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் வெங்கி தனது எக்ஸ் பக்க பதிவில், ”GoodBadUgly ஒரு ஆல்ரைட் அவுட் அண்ட் அவுட் மாஸ் என்டர்டெய்னர். முதல் பாதியில் நல்ல கதையுடனும் இரண்டாம் பாதி ஒரு ஃப்ளாஷ்பேக் எபிசோடுடன் தொடங்குகிறது. சில மாஸ் பிளாக்குகள் மிகவும் நன்றாக வந்துள்ளன, அஜித்தை ஒரு விண்டேஜ் வழியில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் போகலாம், ஆனால் இது நிச்சயமாக சமீபத்திய காலங்களில் அஜித்தின் சிறந்த படமாகும், மேலும் சில சுவாரஸ்யமான மாஸ் தருணங்களுக்கும் ஒரு விண்டேஜ் மாஸ் அஜித்தைப் பார்ப்பதற்கும் இதை முயற்சிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையி நடிகர் அர்ஜூன் தாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திரைப்படம் குறித்தும் தன்னுடைய ஆர்வம் குறித்தும் பதிவிட்டு அஜூத் சார் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும்,"எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த அல்டிமேட் ஜெண்டில்மேன் உடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன். லவ் யூ லவ் யூ அஜித் சார்" என நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
படத்தின் முதல் ஷோ முடிந்து அஜீத் ரசிகர்கள் வெளிவந்த நிலையில் படம் மாஸ், சம்பவம், க்ளாஸ் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். படத்துல சம்பவம் இல்ல; சம்பவம் தான் படமே என FDFS காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் உற்சாக பேட்டி அளித்துள்ளனர். படம் ஆரம்பித்ததில் இருந்தே மாஸ் தான் இது ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து என்று கூறியுள்ளனர்.