Advertisment

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய 'குட் நைட்' பட நடிகை; சமூக வலைதளங்களில் போட்டோஸ் வைரல்!

குட் நைட் பட நடிகை மீதா ரகுநாத் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Meetha Raghunath 1

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய 'குட் நைட்' பட நடிகை மீதா ரகுநாத்;

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குட் நைட் திரைப்படம், ரசிகர்களைக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்றது. தூக்கத்தில் குறட்டை விடும் இளைஞர், ஒரு மெண்மையான பயந்த இயல்புடைய ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது, அவர்கள் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

Advertisment

meetha 1

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

meetha x

குட்நைட் படத்தில் கதாநாயகன் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் தனது எதார்த்தமான நடிப்பால், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தார். குட் நைட் படத்தில் மீதா ரகுநாத்தின் நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. 

meetha x

மீதா ரகுநாத் குட் நைட் படத்தில்தான் அறிமுகம் என்று பலரும் கருதியபோது, அவர் இதற்கு  முன் 'முதல் நீ முடிவும் நீ' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இதற்கு பிறகுதான், குட் நைட் படத்தில் நடித்தார்.  குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை மீரா ரகுநாத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியுள்ளன.

meetha x

இந்த நிலையில்தான், நடிகை மீதா ரகுநாத் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு ஊட்டியில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தற்போது இருவரும் திருமண செய்துகொள்ள உள்ளனர்.

meetha with fince

நடிகை மீதா ரகுநாத் தனது வருங்கால கணவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்து மழையுடன் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவி வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment