93rd birthday of Nadigar Thilagam Sivaji Ganesan : மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். நடிப்பு சக்கரவர்த்தியான அவர் இந்த மண்ணை வீட்டு நீங்கினாலும் என்னாலும் அவருடைய ரசிகர்களால் நடிகர் திலகம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர். இன்று அவரின் 93வது பிறந்த தினம் ஆகும்.
Advertisment
கூகுள் ஒவ்வொரு நாளும் உலகின் தலைசிறந்த கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம், வரலாற்றில் முக்கிய நாட்களை நினைவு கூறும் வகையில் தங்கள் இணைய தேடுதளத்தின் முகப்பில் டூடுல் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். இன்று நடிகர் திலகத்திற்கு சிறப்பு செய்யும் வகையில் ஒரு அற்புதமான சித்திரப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த கூகுள் டூடுலை பெங்களூரை சேர்ந்த கலைஞர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி வரைந்துள்ளார்.
சிவாஜி கணேசன் அவர்களின் பேரனான நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூகுள் டூடுல் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினத்தில் அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தியுள்ளது. இந்த சித்திரப்படத்தை உருவாக்கிய கூகுள் இந்தியா மற்றும் சிறப்பு கலைஞர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி ஆகியோரின் பணி பாராட்டத்தக்கது. மேலும் ஒரு பெருமைக்குரிய நிகழ்வு என்று ட்வீட் செய்துள்ளார்.