கோபியின் செயலால், பக்கவாதம் வந்து பேச முடியாமல் போன அப்பா.. இனி எப்போது மாட்டுவார் கோபி?
விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென தமிழகத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் குறித்த மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் பிரபலம்.
Advertisment
பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பான நாள் முதல் இன்றுவரை பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலை பார்க்கும்போது, ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வே இருக்காது. ஏதோ நம் வீட்டில் ஏற்கெனவே நடந்த நிகழ்வுகள் மாதிரிதான் இருக்கும். அந்தளவுக்கு இந்த சீரியல் மிக யதார்த்தமாக இருக்கும். அதுதான் பாக்கியலட்சுமி சீரியலுடன் ரசிகர்கள் ஒன்றி போக காரணம்!
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே இப்போது இருக்கும் ஒரே கேள்வி’ கோபி எப்போது மாட்டுவார் என்பது தான்.
கோபி பாக்கியாவை விவகாரத்து செய்து’ ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டான். இந்த விஷயம் அவரது அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. ராதிகாவுடன் பேசுவதையே பலமுறை கண்டித்த கோபியின் அப்பா’ மயூவின் மூலம் தற்செயலாக இந்த விஷயம் தெரிந்த உடனே நொந்து போகிறார்.
Advertisment
Advertisements
இப்படி பாக்கியலெட்சுமி சீரியல் பரபரப்பாக செல்ல, இப்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ அனைவரது ஹார்ட் பீட்டையும் எகிற வைத்துள்ளது.
வீட்டிலிருக்கும் கோபியிடம்’ அவரது அப்பா’ ராதிகாவை திருமணம் செய்யும் விஷயம் குறித்து கேட்கிறார். இதைக்கேட்ட கோபி அதிர்ச்சியில் முழிக்கிறார். உடனே பயங்கர கோபத்திலிருந்த கோபியின் அப்பா, இப்போவே இந்த விஷயத்தை வீட்டில இருக்கிறவங்க கிட்ட சொல்றேன் என மாடியிலிருந்து கீழே இறங்குகிறார். அங்கு தான் ஹைலைட்!
படியில் இறங்கி வரும் போது கோபியின் அப்பா கால்தவறி கீழே விழ, வீட்டிலுள்ள அனைவரும் பதறிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பக்கவாதம்.. பேச்சு வராது என சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
கோபி, ராதிகா விஷயம் வீட்டில் அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் இனி அவரால் பேசமுடியாது என்பதால்’ கோபி இப்போது மாட்ட வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “