Baakiyalakshmi serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் பாக்கியலட்சுமி. சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கதையின் நாயகன் கோபியின் திருட்டுத்தனம் அனைத்தும் பாக்கியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் பாக்கியாவும் வீட்டை விட்டு சென்று விட்டார்.

பாக்கியாவை நினைத்து இனியா மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பாக்கியாவை அழைப்பதற்கு அவர் இருக்கும் இடத்திற்கு வருகின்றார் கோபி. அப்போது பாக்கியா கோபியிடம் சத்தியம் வாங்கவே, கோபி ராதிகா நினைப்பில் இருந்துகொண்டு சத்தியம் செய்து பாக்கியாவிடம் மீண்டும் வசமாக மாட்டிக்கொள்கிறார். இதன் பின்பு என்ன நடக்கவுள்ளது என்பதைக் காண ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது.

இப்படி பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், கோபி தனது மைண்ட் வாயஸில், எப்போது ராதிகா திருமணத்திற்கு சம்மதம் கூறுகிறாரே, அப்போது பாக்கியாவிற்கு டிவைஸ் கொடுத்து விட வேண்டும் என்றும், அதற்கு முன்னர், பாக்கியவை சமாதான படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

பிறகு பாக்கியாவை சந்தித்து பேசும் கோபி இனி தவறு செய்வதில்லை என்பது போன்று கூறுகிறார். அதற்கு பாக்கியாவிடம் சத்தியம் செய்யும் கோபி, கோபி ராதிகா நினைப்பில் இருந்துகொண்டு சத்தியம் செய்து மீண்டும் ஒருமுறை மாட்டிக்கொள்கிறார். தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோபி மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக பேசி மாட்டிக்கொண்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil