/tamil-ie/media/media_files/uploads/2019/07/gorilla-movie-1.jpg)
gorilla full movie, gorilla full movie download, கொரில்லா ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்
Gorilla Tamil Movie Leaked: ஜீவா- ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான கொரில்லா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கொரில்லா திரைப்படத்தை டான் சாண்டி இயக்கியிருக்கிறார். ஜீவா, ஷாலினி பாண்டே ஆகியோருடன் ஒரு சிம்பன்சியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. ஜீவா பகுதி நேர போலி டாக்டராகவும், பிக் பாக்கெட்டாகவும் வேஷம் கட்டியிருக்கும் படம் இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/gorilla-movie-download-2-300x186.jpg)
Gorilla Tamil Movie Leaked Online On Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கொரில்லா திரைப்படம்
சிம்பன்சி நடித்திருப்பதால் காமெடியாகவும், குழந்தைகளை கவரும் விதமாகவும் இந்தப் படம் அமைந்திருப்பதாக ஒரு சிலர் கருத்து கூறியிருக்கிறார்கள். வேறு சிலரோ இந்தப் படம் குறித்து நெகடிவ் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில் படம் வெளியான மறுநாளே கொரில்லா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.
இதேபோல நேற்று முன்தினம் வெளியான வெண்ணிலா கபடி குழு 2 படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இப்படி புதுப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவதால் சினிமாத் துறையினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எனினும் தமிழ் ராக்கர்ஸை தடுக்க அவர்களுக்கு வழி தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.