Goundamani Birthday: பிறக்கும் போதே எவரும் ஆளுமைகளாக பிறப்பதில்லை. ஆனால், அந்த பிறப்பு தன்னையே தினம் தினம் செதுக்கி ஒரு உச்சத்தை அடையும் போது ஆளுமையாக உருமாறுகிறது. அப்படி சினிமாவில் ஒரு உச்சபட்ச காமெடியனாக தன்னை செதுக்கிய கவுண்டமணி எனும் ஆளுமைக்கு இன்று (மே.25) பிறந்தநாள்.
Advertisment
இவரின் காமெடி ரகத்தை பற்றி இனி அலச ஒன்றுமில்லை. ஏற்கனவே இந்த 81 வயது மெகா கலைஞனின் காமெடி சென்ஸ் குறித்து பேசி, அலசி, துவைத்து, காய வைத்து, மடித்தும் வைக்கப்பட்டுவிட்டது.
கவுண்டமணி யார் இனி வரும் சந்ததிகள் கேட்டால், அவர்களுக்கு அவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியது என்ன என்பதை, அவரது சில டயலாக்குகள் வாயிலாக இங்கே பார்க்கலாம்.
Advertisment
Advertisement
படம்: சூரியன்
நடிகர் 1: திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்...
கவுண்டமணி: அப்புறம் ஏண்டா நாயே பல்லு விளக்குற? தினமும் காலைல எந்திருச்சு ஒரு தடவை திருப்புகழ பாடினீனா, வாயிலிருந்து, மூக்கு, கண்ணு காது வரைக்கும் மணக்கும். அவனவன் கம்பியூட்டர்ல பல்லு விளக்குறானுங்க... இவனுங்க இன்னும் திருப்புகழ பாடிக்கிட்டு இருக்கானுங்க.
நடிகர் 1: என்னை தலைவர் பதவியில் அமர வைத்து, சந்தோஷத்தில் மூழ்க வைத்து, வேறு யாருக்குமே கிடைக்காத பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மக்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
கவுண்டமணி: டேய்... என்னடா மம்மிய பார்த்த எம்.எல்.ஏ. மாதிரி சும்மா பம்முறியே!
படம்: தாய் மாமன்
கவுண்டமணி: மாப்பு, பேசாம எம்.எல்.ஏ. ஆகிடு.
நடிகர் 1: அதுக்கு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கணும்.
கவுண்டமணி: அந்த கருமத்துக்கு படிப்பே தேவையில்லை. ஊருல நொண்டி நொசக்கான், வெந்தது வேகாதது, பெட்டிக் கடைல கடன் சொன்னது, பீடிய கிள்ளிக் குடிச்சது, சந்தை கடைல கருப்பட்டி திருடிட்டு ஓடுனது... இந்த மொத்த கும்பலும் அங்க தான் கெடக்கு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news