/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-212735-2025-09-02-21-27-50.jpg)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனிச்சிறப்பை ஏற்படுத்தியவர் நடிகர் கவுண்டமணி. இவர் திரையுலகில் நுழைந்த காலத்திலிருந்தே, தனது திறமையான டைமிங், நையாண்டி கலந்த நக்கல் மற்றும் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஹ்யூமர் மூலம் ரசிகர்களை கவர்ந்தெடுத்தவர்.
இவரது காமெடி வசனங்கள் இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக அவரது நையாண்டி, சுருக்கமான மற்றும் நேர்மையான டைலாக் டெலிவரி — மற்ற நடிகர்களால் பின்பற்ற முடியாத அளவுக்கு தனித்துவம் கொண்டது. கவுண்டமணியின் பல திரைப்படங்களில், அவருடன் இணைந்து நடித்த நடிகர் செந்தில் கூட்டணி குறிப்பிடத்தக்கது. இவர்களின் காமெடி ட்யூவோ, தமிழ்ச் சினிமா வரலாற்றிலேயே மறக்க முடியாததொரு அத்தியாயம். இவர்கள் நடித்த ‘காம்போதான் படத்திற்கு ஹைலைட்டே’ என்ற வாசகம் போல, பல படங்களில் இவர்களது காமெடி சீன்களே அந்தப் படங்களின் உயிராக அமைந்தன.
கவுண்டமணி, காமெடியை வெறும் சிரிப்பு அளிக்கும் கருவியாக மட்டுமல்லாது, சமூக விமர்சனங்களையும் நையாண்டியாக சொல்லும் ஒரு மேடையாக மாற்றியவர். இவர் செய்த நகைச்சுவை, காலத்தால் அழிக்கப்படாத சினிமா பொக்கிஷமாக ரசிகர்களிடையே என்றும் நிலைத்து நிற்கும். இன்று வரை அவருக்கு இணையாக, அந்த மாதிரியான நையாண்டிக் காமெடியை கொண்டு வர ஒருவரும் தோன்றவில்லை என்பது உண்மையாகத்தான் சொல்ல வேண்டியதாயுள்ளது.
அரசியல் கருத்துக்களை சர்வ சாதாரணமாக தன் நகைச்சுவை மூலம் சரமாரியாக தாக்கி கிண்டலடித்தவர். மேலும் கூட நடிக்கும் சக நடிகர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகக் கூடியவர். சொல்லப்போனால் ரஜினியே கவுண்டமணியிடம் எதாவது சொல்லி என் மானத்தை வாங்கிராதீங்க என்று சொல்லுவாராம்.
அந்த அளவுக்கு யாருக்கும் பயப்படாமல் எதையும் ஓப்பனாக பேசக்கூடியவர். இந்த நிலையில் கவுண்டமணியின் ஹூயுமர் சென்சை பிரபல இயக்குனர் ராம்தாஸ் ஒரு பேட்டியில் கூறினார். ராம் தாஸ் அவருடைய திருமணத்திற்காக அழைப்பிதழை வைக்க கவுண்டமணியின் வீட்டிற்கு சென்றாராம்.
போய் உட்கார்ந்ததும் அவர் அருகிலேயே கவுண்டமணி வளர்க்கும் நாயும் உட்கார்ந்ததாம். உடனே ராம்தாஸ் கவுண்டமணியிடம் ‘ நாயை பார்த்து இதோட பேர் என்ன சார் ’ என்று கேட்டாராம். அதற்கு கவுண்டமணி ‘இது பேர் நாய்தான், வேறென்ன பேர் வைக்க? அதுக்கு பேர் வச்சுக்கிட்டு அதையும் நாம நியாபகம் வச்சுக்கிட்டு, அது எதுக்கு ராம்தாஸு’ என்று அவருடைய பாணியிலேயே சொல்லி கிண்டலடித்தாராம்.
இதை சொல்லி ராம்தாஸ் மேடையில் வயிறு குலுங்க சிரிக்க மேடையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். மேலும் கவுண்டமணி கவுண்டமணிதான் என்றும் அவருடைய பெருமையை சொல்லி பேசினார்.
நாய்க்கு பேரு நாய் தான் - கவுண்டர் மகான்! 😅😆 https://t.co/nxB1yhzEIypic.twitter.com/NCy0l2XqCn
— Chocks (@chockshandle) September 1, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.