பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் ட்விட்டரில் ஜி.பி. முத்து ஆர்மி உருவாக்கி ட்ரெண்டிங் செய்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார். அவர் வேறு யாருமல்ல டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துதான். பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக சென்று அவ்வளவு பெரிய பிரம்மாண்ட வீட்டுக்குள் தனியாக இருந்தபோது அவரிடம் வெளிப்பட்ட பதற்றம் படபடப்பு அச்சம் எல்லாமே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து சிரிக்க வைத்தது.
பிக் பாஸ் வீட்டுக்குள் தனியாக இருப்பது பயமாக இருக்கிறது. யாராவது ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று ஜி.பி. முத்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, அதற்கு கமல்ஹாசன், டெக்னிக்கல் பிராபளம், நாளை 4.30 மணி வரை நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூற, “நான் எப்படி தனியாக இருப்பது. பயமாக இருக்கிறது” என்று ஜி.பி முத்து கூறினார். இதையடுத்து, கமல்ஹாசன், உலகில் ஆதாம் படைத்த பிறகு, ஏவாள் படைக்கப்படும் வரை ஆதாம் எப்படி தனியாக இருந்திருப்பார் நினைத்துப் பாருங்கள் என்று கேட்க, ஆதாம் ஏவாள் கதை எல்லாம் தெரியாத ஜி.பி. முத்து ஆதாமா? என்று வெள்ளந்தியாக கேட்டது செம காமெடியாகிப் போனது.
ஜி.பி. முத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே இந்த சீசன் வேற லெவலில் இருக்கப் போகிறது என்பது ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
டிக்டாக் செயலி மூலம் உலகம் முழுவது பலபேர் பிரபலமாகி உள்ளார்கள். தமிழ்நாட்டில் டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில் ஜி.பி. முத்து ஸ்பெஷல். அவருடைய நெல்லை வட்டார வெள்ளந்தியான பேச்சு, வசையும் அனைவரையும் சிரிக்க வைக்கும். இதன் மூலம் ஜி.பி. முத்து உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள ஜி.பி. முத்துவுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள், ஜி.பி. முத்து ஆர்மி உருவாக்கி அவர் தொடர்பான வீடியோக்கள், ட்வீட்களை ட்ரெண்டிங் வருகின்றனர்.
அதில், பிக் பாஸ் வீட்டில், சக போட்டியாளர்கள் உடன் ஜி.பி முத்து டான்ஸ் ஆடுகிற வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜி.பி. முத்துவின் டான்ஸ் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், தலைவர் என்னமா ஆடுறாரு என்று பதிவிட்டு ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே இருக்கும்போது, ஜி.பி. முத்து வெளியிடும் வீடியோக்கள் வைரலாகும். இப்போது அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதும் அவருடைய வீடியோ வைரலாகி வருகிறது. டிக் டாக் பிரபலமாக இருந்து இன்று விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியாளராக வந்திருக்கும் ஜி.பி. முத்துவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஓவியா ஆர்மி, லாஸ்லியா ஆர்மி என்று பார்த்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ஜி.பி. முத்து ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது. ரசிர்கள் பலரும் ட்விட்டரில், ஜி.பி முத்து தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு அவரை கொண்டாடி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”