Advertisment

கோயிலில் தகராறு; தகாத வார்த்தைகளில் பேசி பூசாரியுடன் சண்டையிட்ட ஜி.பி முத்து

ஜி.பி.முத்து தகராறில் ஈடுபட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
GP Muth

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சமூக வலைதள பிரபலமும், நடிகருமான ஜி.பி.முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோயிலாகும்.

Advertisment

இந்த கோயிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் நாள் இந்த கோயிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜி.பி.முத்து வெளியூர் செல்லாத நேரங்களில் பூஜையில் கலந்து கொள்வாராம். அதே போல் இந்த கோயிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் அந்த கோயிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து, இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது என்று மகேஷிடம் கூறியதாக தெரிகிறது.

அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும், ஜி.பி.முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே வந்து இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுள்ளனர். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். ஜி.பி.முத்து தகராறில் ஈடுபட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“we

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment