கடந்த 2019-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரி ஏய்ப்பு ஜி.எஸ்.டி கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது குறித்து ஜிஎஸ.டி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்,ரஹ்மான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் 2 ஆஸ்கார் விருது பெற்றுள்ள ரஹ்மான் தற்போது வெளியாக உள்ள வரலாற்றுப்படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த தனது படைப்புகளின் காப்புரிமையை முழுவதுமாக தயாரிப்பாளர்களிடம் கொடுக்காதது தொடர்பாக 6.79 கோடி சேவை வரி செலுத்த வேண்டும் என்று கூறி ஜி.எஸ்.டி கவுன்சில் நொட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்,ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான ஏ.ஆர்.ரஹ்மான் தாக்கல் செய்துள்ள மனுவில்,
இசை படைப்புகளின் காப்புரிமை தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள்தான். அதற்கு தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதமானது. தனது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், தான் 6.79 கோடி வரி செலுத்தவில்லை என்று ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுளளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜி.எஸ்.டி கவுன்சில் அளித்த நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் பதில் மனு தாக்கல் செய்த ஜி.எஸ்.டி ஆணையர் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் எந்த நோக்கமும் இல்லை என்றும், அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“