ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் மூன்று வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் தேதி வெளியானது.
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் டீஸர் மார்ச் 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு யூடியூப்பில் வெளியாகி இருந்தது. அஜித்தை மீண்டும் மாஸ் ஆன ரோலில் பார்க்க காத்திருந்த அஜித் ரசிகர்கள் டீசரை பார்த்ததும் சமூக வளைத்தளங்களில் கொண்டாடினர்.
மேலும் தியேட்டரிலும் திரையிடப்பட்ட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. படம் வெளியாகி 24 மணி நேரத்தில் குட் பேட் அக்லீ டீஸர் தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளது.
24 மணி நேரத்தை கடந்த நிலையில் 33 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது. GBU டீஸர். "Most Viewed Kollywood teaser in 24 hours" என இந்த சாதனையை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டும் இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/02/eY0zK59Szek3nrQ3avRq.jpeg)