- ஒவ்வொரு குழு உறுப்பினரும் படப்பிடிப்பின் போது மூன்று அடுக்கு மருத்துவ முகமூடி மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.
- ஹேண்ட்ஷேக்குகள், அரவணைப்புகள், முத்தங்கள் மற்றும் பிற உடல் சார்ந்த வாழ்த்துக்களைத் தவிர்க்கவும்.
- செட் / அலுவலகங்கள் / ஸ்டுடியோக்களில் சிகரெட் பகிர்வதை நிறுத்த வேண்டும்.
- சக ஊழியர்களிடையே 2 மீட்டர் தூரம் கடைப்பிடிக்க வேண்டும்.
- 60 வயதுக்கு மேற்பட்ட குழு மற்றும் நடிகர்களை குறைந்தது மூன்று மாதங்களுக்கு தவிர்க்கவும்.
இவை இந்திய தயாரிப்பாளர்கள் சங்கமான கில்ட் பரிந்துரைத்த 37 பக்க “புதிய பணி நெறிமுறையில்” இடம்பெற்றுள்ள சில “பொது நடைமுறைகள்”. பொழுதுபோக்குத் துறை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கும்போது இவற்றை செயல்படுத்த வேண்டும். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, வெள்ளிக்கிழமை சில பங்குதாரர்களுடன் நடத்திய வீடியோ ஆலோசனைக்குப் பிறகு, வெளியிடப்பட்ட இந்த ஆவணம், தொற்றுநோய் தடுப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது.
அப்போ ஒயின், இப்போ பீர்: மகன்களோடு வசமாக போலீஸில் மாட்டிக் கொண்ட சென்னை பெண்
படப்பிடிப்புக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு குழுவினர், கலைஞர்கள் மற்றும் பங்கேற்பாளர்களைப் ரிப்போர்ட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க, தள அடையாளங்களை உருவாக்குதல். நிலையான பெஞ்சுகளுக்கு மேல் சிறிய நாற்காலிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்டவைகளும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைகளில் குளிப்பதற்கான சாத்தியமான ஏற்பாடுகளும் அடங்கும். அனைத்து செயல்பாடுகளிலும் சிறிய வாஷ் பேசின்கள், மற்றும் சுத்திகரிப்பு மற்றும் ஆன்-செட் சுகாதாரத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவைகளும் அடங்கும்.
வழிகாட்டுதல்களின் முக்கிய அங்கம் “முடி மற்றும் அலங்காரம்” நெறிமுறை. இது ஒற்றை பயன்பாடு அல்லது டிஸ்போசபிள் பொருட்களை பரிந்துரைக்கிறது. பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும் முடி விக் / முடி நீட்டிப்புகளை சுத்தம் செய்தல், மிக முக்கியமாக, மேக்கப் செய்து முடித்ததும், முகமூடியைக் காட்டிலும் முகக் கவசத்தைப் பயன்படுத்துதல், தவிர, முடி மற்றும் அலங்காரம் செய்யும் பணியாளர்கள், முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும். இது முழு படப்பிடிப்பின் போதும் கட்டாயமாக இருக்கும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள் 60 வயதிற்கு மேற்பட்ட குழு உறுப்பினர்களை படப்பிடிப்பு தொடங்கும் நாளிலிருந்து மூன்று மாதங்கள் வரை, தவிர்க்க வேண்டும் என்றும் கில்ட் பரிந்துரைத்துள்ளது.
துபாயில் இந்திய பெண்களுக்கு நேர்ந்த சோகம் – ஊரடங்கு நேரத்திலும் தீராத கொடுமை
கில்ட் இந்த வழிகாட்டுதல்களைப் பகிரங்கப்படுத்தியிருந்தாலும், வேறு சில திரைப்பட நிறுவனங்கள் தங்களது சொந்த SOP-களை (நிலையான இயக்க நடைமுறை) அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளன. மற்றவர்கள் இன்னும் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க – No hugs & kisses, masks, gloves for all: Film, TV shoot guidelines
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”