/tamil-ie/media/media_files/uploads/2019/06/Vijaya-Nirmala-Passed-Away-1.jpg)
Vijaya Nirmala Death: தெலுங்கு சினிமாவில் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையோடு விளங்கிய விஜய் நிர்மாலாவுக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. 75 வயதான அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை.
இவர் ‘மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டுப் பெண், பணமா பாசமா, என் அண்ணன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 44 படங்களை இயக்கியுள்ள விஜய நிர்மலா, அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றதோடு கடந்த 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கிய 2 பெண் இயக்குநர்களில் இவரும் ஒருவர். மற்றொருவர் நடிகை, சாவித்ரி. தெலுங்கு சினிமாவில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, இவருக்கு ’ரகுபதி வெங்கையா’ விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இவருக்கு கிருஷ்ண மூர்த்தி என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நரேஷ் என்ற மகன் இருக்கிறார். இவரும் தெலுங்கு திரையுலகில் நடிகர். முதல் திருமண முறிவிற்குப் பிறகு தெலுங்கு சினிமாவின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவை இரண்டாவதாக மணம் முடித்தார். அந்த வகையில் தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவிற்கு, இவர் சித்தி (ஸ்டெப் மதர்).
மாரடைப்பால் மறைந்த விஜய நிர்மலாவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.