/indian-express-tamil/media/media_files/MslNpB0wFdS0Yym35CEy.jpg)
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பட விநியோகஸ்தராகவும் செயல்பட்டுவருபவர் நடிகர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் அமைப்பையும் நடத்திவருகிறார்.
இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் இவர் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து அரசியல் மற்றும் சினிமாவில் பயணித்துவருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கருணாஸ் திருச்சி செல்ல சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரிடம் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது அவர் கொண்டு வந்திருந்த பையில் 40 துப்பாக்கி தோண்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்த துப்பாக்கி தோட்டாக்களுக்கு கணக்கு காண்பிக்கப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் கருணாஸ் தனது துப்பாக்கியை காவல் துறையில் ஒப்படைத்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிக் குண்டுகளை அவர் தெரியாமல் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கருணாஸிடம் துப்பாக்கி குண்டுகள் கண்டறியப்பட்டதால் அவர் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக சென்னை விமான நிலையததில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸூம் சினிமா பாடகி ஆவார். இவர் கருணாஸின் திண்டுக்கல் சாரதி என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், இவர் நிறைய நாட்டுப்புறம் சார்ந்த பாடல்களை பாடியுள்ளார். தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுவருகிறார்.
நடிகர் கருணாஸ் பைகளில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.