Advertisment
Presenting Partner
Desktop GIF

வாழ்வில் புது வரவு: மகிழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி!

ஜி.வி-யின் ‘அசுரன்’ படத்தில் ‘எள்ளு வய பூக்கலையே’ என்ற பாடலை சைந்தவி பாடியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
GV Prakash Saindhavi Blessed with a baby girl

GV Prakash Saindhavi Blessed with a baby girl

GV Prakash - Saindhavi : ’வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவரும் பாடகி சைந்தவியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இசையில் பிஸியான ஜி.வி, ஒரு கட்டத்தில் நாயகனாகவும் களம் இறங்கினார். பின்னர் இசை, நடிப்பு என இரண்டையும் பேலன்ஸ் செய்யும் நிலை ஏற்பட்டது.

Advertisment

தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு

ஜி.வி இசையமைக்கும் பெரும்பாலான படங்களில் ஒரு பாடலையாவது பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சைந்தவி. குறிப்பாக ஜி.வி-யின் ‘அசுரன்’ படத்தில் ‘எள்ளு வய பூக்கலையே’ என்ற பாடலை சைந்தவி பாடியிருந்தார். வித்தியாசமாக பாடியிருந்த அந்த பாடலுக்கு பல விருதுகளும் கிடைத்தது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி தம்பதிக்கு தி.நகரில் உள்ள தனியார்

மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி நேற்று இரவு இணையத்தில் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையே தற்போது தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை தற்போது இணையத்தில் தெரிவித்திருக்கிறார் ஜி.வி. இதனையடுத்து, ஜி.வி - சைந்தவி தம்பதிகளுக்கு திரையுலகத்தினர் தொலைபேசியிலும் , குறுஞ்செய்தி மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் போதுமானதா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Gv Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment