/tamil-ie/media/media_files/uploads/2018/09/d274.jpg)
ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டர்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் புரமோ வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவ்வப்போது சமூகப் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இதன்மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது அடங்காதே, குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், ஜெயில், 100% காதல், காதலைத் தேடி நித்யா நந்தா உள்ளிட்ட படங்களை கையில் வைத்துள்ளார்.
சமீபத்தில், "உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்...இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘1978ல் ஹவுஸ்புல், பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? காத்திருங்கள் நாளை வரை’ என்று பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யார் அந்த பெண்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Bharathi kanda pudhumai pennai kaana thayaara? #Payanam#comingsoon#queen best wishes team ... @realsarathkumarpic.twitter.com/CwMv4wQByH
— G.V.Prakash Kumar (@gvprakash) September 17, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.