இசையமைப்பாளர் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவி தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு ரொமாண்டிக் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததால் அந்தப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜீ.வி.பிரகாஷ், இவர் தனது பால்ய தோழியான பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஜீ.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்ததால் இந்த ஜோடி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாடகி சைந்தவி அடிக்கடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிர்களின் லைக்குகளை பெறுவார்.
குழந்தை பிறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் பாடகி சைந்தவி அவர்களுடைய 7வது ஆண்டு திருமண நாளில் தனது கணவருடன் இருக்கும் ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சைந்தவி கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது.
இந்த புகைப்படத்தைப் பற்றி சைந்தவி குறிப்பிடுகையில், “ எனது இனிய கணவருக்கு 7-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மீது உள்ள காதல் வளர்ந்து கொண்டே போகிறது. நான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், நீங்கள் என் மீது மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். நம் குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக நீங்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, இன்னும் என் காதல் அதிகரிக்கிறது. நீங்களும், இந்த சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயங்கள்” மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷு சைந்தவியும் ஒரு திரைப்பட போஸ்டரில் ஹீரோ ஹீரோயினும் போஸ் கொடுப்பதுபோல அழகாக இருக்கிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.