Advertisment

இசை, நடிப்பு, சமூகப்பணி அடுத்து என்ன? ஜி.வி.பிரகாஷின் திடீர் திட்டம்!

இசை, நடிப்பு என பிஸியாக வலம் வந்தாலும் மற்றொரு புறம் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் ஜி.வி. 

author-image
WebDesk
May 28, 2019 12:13 IST
gv prakash magathana manidhargal

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது 100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி, சிவப்பு மஞ்சள் பச்சை, காதலிக்க யாருமில்லை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

பெரும்பாலும் தனது படங்களுக்கு தானே இசையமைப்பதுடன், தனுஷின் ‘அசுரன்’ படத்திற்கும், சூர்யா நடிக்கும் ’சூரரைப் போற்று’ என்ற படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜி.வி-யும் சித்தார்த்தும் தற்போது இணைந்து நடித்திருக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இதனை இயக்குநர் சசி இயக்கியுள்ளார்.

இசை, நடிப்பு என பிஸியாக வலம் வந்தாலும் மற்றொரு புறம் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் ஜி.வி.

இந்நிலையில் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் சாமானியர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர, இவர் ஓர் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

சாதாரணப் பின்னணியில் இருந்து வந்து, சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போராடி வருபவர்களை நேரடியாக சந்தித்து, அவர்களை நேர்க்காணல் செய்து, தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வெளியிட இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிகழ்ச்சிக்கு ‘மகத்தான மாமனிதர்கள்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், “போராளிகளை வெளியுலகத்துக்கு கொண்டு வருவதற்காக, துளியும் லாப நோக்கில்லாமல் தயாரிக்கப்படும் நிகழ்ச்சி இது” என்கிறார்.

 

#Tamil Cinema #Gv Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment