Advertisment

பிரம்மிக்க வைத்த ஜிப்ஸி போஸ்டர்... இந்திய பியூட்டியுடன் ஜீவா ஜோடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gypsy review rating, jiiva, natasha singh

gypsy review rating, jiiva, natasha singh

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படம் “ஜிப்ஸி”. இதன் முதல் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியானது.

Advertisment
June 2018

குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் ஜீவாவை வைத்து இயக்கும் படத்திற்கு ஜிப்ஸி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். முதல் போஸ்டரை அப்படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

June 2018

இப்படத்தில், ஜீவா கதாநாயகனாக நடிக்க, பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டி.வி நிகழ்ச்சிகளிலும் நடித்து வரும் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளருமான நடாஷா சிங் நடிக்கிறார்.

'குக்கூ' படத்தை தொடர்ந்து ‘ஜிப்ஸி’ படத்தில் மீண்டும் ராஜு முருகனுடன் இணைந்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

June 2018

நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல்கதையாக இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது

Jeeva Raju Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment