Advertisment
Presenting Partner
Desktop GIF

Gypsy Review : காதல், மனித நேயம், சாதி அரசியல் பேசும் ‘ஜிப்ஸி’

படத்தின் பல்வேறு காட்சிகளை சென்சார் போர்டு கட் செய்து விட்ட நிலையில், அந்தக் காட்சிகள் யூ-ட்யூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gypsy review rating, jiiva, natasha singh

gypsy review rating, jiiva, natasha singh

Gypsy Tamil Movie Review : 'ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன், ‘ஜிப்ஸி’ படத்தை இயக்கியிருக்கிறார். டைட்டில் ரோலில் நடிகர் ஜீவா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். சாலை பயணத்தில் உருவாகும் காதல், அதிலிருக்கும் சமூகப் பார்வை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

Advertisment

படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், வெளியீடு மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், சென்சார் போர்டின் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, ஜிப்ஸி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

Live Blog

Gypsy Tamil Movie Review and Rating

இன்று வெளியாகியிருக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் ஆன்லைன் விமர்சனங்களையும், படம் குறித்த மற்ற தகவல்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்














Highlights

    14:58 (IST)06 Mar 2020

    மனிதம் மட்டுமே புனிதம்

    ஜிப்ஸியும், வஹீதாவும் பல வழிபாட்டுதளங்களுக்கு செல்கிறார்கள். இதன் மூலம் மனிதம் மட்டுமே புனிதம் என்பதை உணர்த்த முயற்சி செய்திருக்கிறார் ராஜுமுருகன்.

    14:47 (IST)06 Mar 2020

    அமைதி, அன்பு, மனிதத்திற்கான படம்

    அமைதி, அன்பு, மனிதத்திற்கான படம் என இவர் குறிப்பிட்டுள்ளார். 

    13:54 (IST)06 Mar 2020

    முதல் பாதி காதலுக்காக

    ஜிப்ஸி திரைப்படம் முதல் பாதி காதலுக்காக என இவர் குறிப்பிட்டுள்ளார்

    13:03 (IST)06 Mar 2020

    அரசியலும் மதமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது

    ”நமது நாட்டு அரசியலும் மதமும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது" என இவர் குறிப்பிட்டுள்ளார். 

    12:32 (IST)06 Mar 2020

    சென்சார் போர்டு குறித்து ராஜு முருகன்

    12:08 (IST)06 Mar 2020

    ஜிப்ஸியைக் கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்

    ஜிப்ஸி கதையை முதலில் தனுஷிடம் தெரிவித்ததாகவும், அவரின் பிஸி ஷெட்யூலால், நடிக்க முடியவில்லை எனவும் இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்திருந்தார். தற்போது ஜிப்ஸி படத்துக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள். 

    11:38 (IST)06 Mar 2020

    சென்சாரில் கட்டான ‘ஜிப்ஸி’ படத்தின் காட்சி

    சென்சாரில் கட்டான ‘ஜிப்ஸி’ படத்தின் காட்சி யூ-ட்யூபில் வெளியானது

    11:28 (IST)06 Mar 2020

    கோவையில் ரிலீஸ் ஆகாத ஜிப்ஸி

    கோயம்பத்தூரில் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை என அங்குள்ள ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

    11:18 (IST)06 Mar 2020

    லேசான காதல் கடினமான உண்மையை சந்திக்கிறது

    லேசான காதல் கடினமான உண்மையை சந்திக்கிறது. ஜீவாவின் லுக்கும், பெர்ஃபார்மென்ஸூம் ரொம்பவும் பிடித்திருக்கிறது என மறைந்த மூத்த நடிகர், எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐகே ராதா கூறியுள்ளார். 

    11:05 (IST)06 Mar 2020

    வெரி வெரி பேட்

    சமகால அரசியலை மையப்படுத்தி, நிஜ போராளிகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த ’வெரி வெரி பேட்’ பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் யூ-ட்யூபில் பார்த்திருக்கிறார்கள். 

    10:57 (IST)06 Mar 2020

    கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள்

    பயணம், காதல் மற்றும் வாழ்க்கை பற்றிய ஒரு கதை வலுவான அரசியல் சாயல்களில் பயணித்து இடைவெளிக்குப் பிறகு வன்முறையாக மாறுகிறது என இவர் தெரிவித்துள்ளார். 

    10:55 (IST)06 Mar 2020

    மனதை வருடும் ஜிப்ஸி பாடல்

    சந்தோஷ் நாராயாணன் இசையில் ‘காத்தோடு பூ மணக்க’ எனும் ‘ஜிப்ஸி’ பாடல் பலரின் ஃபேவரிட் பாடலாக இடம்பிடித்துள்ளது. 

    ராஜு முருகன் இதற்கு முன்பு இயக்கியிருந்த ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகியப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அந்த வகையில் ‘ஜிப்ஸி’ மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. தவிர, சமகால பிரச்னைகளை பேசுவதாலும், ஆதிக்கத்துக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாலும், ஜிப்ஸியை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
    Tamil Movie Review Jiiva
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment