Gypsy Tamil Movie Review : ‘ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன், ‘ஜிப்ஸி’ படத்தை இயக்கியிருக்கிறார். டைட்டில் ரோலில் நடிகர் ஜீவா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். சாலை பயணத்தில் உருவாகும் காதல், அதிலிருக்கும் சமூகப் பார்வை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், வெளியீடு மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், சென்சார் போர்டின் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, ஜிப்ஸி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
Live Blog
Gypsy Tamil Movie Review and Rating
இன்று வெளியாகியிருக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் ஆன்லைன் விமர்சனங்களையும், படம் குறித்த மற்ற தகவல்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்
ஜிப்ஸியும், வஹீதாவும் பல வழிபாட்டுதளங்களுக்கு செல்கிறார்கள். இதன் மூலம் மனிதம் மட்டுமே புனிதம் என்பதை உணர்த்த முயற்சி செய்திருக்கிறார் ராஜுமுருகன்.
அமைதி, அன்பு, மனிதத்திற்கான படம் என இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிப்ஸி திரைப்படம் முதல் பாதி காதலுக்காக என இவர் குறிப்பிட்டுள்ளார்
”நமது நாட்டு அரசியலும் மதமும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது” என இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிப்ஸி கதையை முதலில் தனுஷிடம் தெரிவித்ததாகவும், அவரின் பிஸி ஷெட்யூலால், நடிக்க முடியவில்லை எனவும் இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்திருந்தார். தற்போது ஜிப்ஸி படத்துக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.
சென்சாரில் கட்டான ‘ஜிப்ஸி’ படத்தின் காட்சி யூ-ட்யூபில் வெளியானது
கோயம்பத்தூரில் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை என அங்குள்ள ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லேசான காதல் கடினமான உண்மையை சந்திக்கிறது. ஜீவாவின் லுக்கும், பெர்ஃபார்மென்ஸூம் ரொம்பவும் பிடித்திருக்கிறது என மறைந்த மூத்த நடிகர், எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐகே ராதா கூறியுள்ளார்.
சமகால அரசியலை மையப்படுத்தி, நிஜ போராளிகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த ’வெரி வெரி பேட்’ பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் யூ-ட்யூபில் பார்த்திருக்கிறார்கள்.
பயணம், காதல் மற்றும் வாழ்க்கை பற்றிய ஒரு கதை வலுவான அரசியல் சாயல்களில் பயணித்து இடைவெளிக்குப் பிறகு வன்முறையாக மாறுகிறது என இவர் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயாணன் இசையில் ‘காத்தோடு பூ மணக்க’ எனும் ‘ஜிப்ஸி’ பாடல் பலரின் ஃபேவரிட் பாடலாக இடம்பிடித்துள்ளது.