சமீபத்தில் திருமணம் முடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவருக்காக அல்வா செய்து கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நாயகியாக வளர்ந்தவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் நடிப்பில் கடைசியாக மஹா படம் வெளியானது தற்போது ஒரு சில படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகா தனது நீண்ட நாள் பிஸினஸ் பார்ட்டனரான சோகைல் கதூரியாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறி, கதூரியா ஹன்சிகாவுக்கு ப்ரபோஸ் செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 4-ந் தேதி ராஜஸ்தானில் உள்ள முண்டோடா கோட்டை அரண்மனையில், ஹன்சிகா மோத்வானி சோகைல் கதுரியா திருமணம் நடைபெற்றது. நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணைத்தில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து மும்பை திரும்பிய தம்பதி மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமணம் தனது நடிப்பை பாதிக்காது என்றும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் ஹன்சிகா கூறியிருந்தார். இதனிடையே ஹன்சிகா அல்வா செய்து கொடுத்து கணவர் சோகைல் கதுரியாவின் இதயம் மற்றும் அன்பை பெற்றுள்ளார்.
சோகைல் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகாவின் அல்வா பறிமாறுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ர்ந்துள்ளார். படத்தில், அல்வாவை பறிமாறும் ஹன்சிகா தனது திருமண மெஹந்தி மற்றும் நீல ஆடைகள் அணிந்திருப்பதை காணலாம். முன்னதாக, இன்று ஹன்சிகா தனதுஇன்ஸ்டாகிராமில் புதிய படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஹன்சிகாவும் சோஹேலும் சிவப்பு நிற ஆடைகளிலும், அவரது தாயும் சகோதரரும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளையும் அணிந்திருந்தனர்.
மேலும் ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் இருந்து திருமண நாள் வரை, ஒவ்வொரு தோற்றத்திலும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil