வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி.. செம குத்தாட்டம் போட்ட ஹன்சிகா

ஹன்சிகாவைத் தவிர, நடிகை ஸ்ரீயா ரெட்டி உட்பட அவரது பல நண்பர்களும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

Hansika Motwanis bachelorette in Greece
ஹன்சிகா மோத்வானி

நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது வருங்கால கணவர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார். இருவருக்கும் திருமணம் விரைவில் நடக்க உள்ளது.

இந்த நிலையில், கிரீஸில் நடந்த அவரது பேச்லரேட்டை-ஐ (திருமணமாகாத இளம்பெண் திருமணத்துக்கு முன்பு அளிக்கும் விருந்து) பார்ட்டி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகி குதுகலத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஹன்சிகாவைத் தவிர, நடிகை ஸ்ரீயா ரெட்டி உட்பட அவரது பல நண்பர்களும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர். கைகளில் வளையல்களுடன் ஹன்சிகா மோத்வானி, மணப்பெண் என்ற அடையாளத்துடன் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியா திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூர் கோட்டையில் வைத்து நடைபெறுகிறது. திருமணத்திற்கு முந்தைய மெகந்தி மற்றும் சங்கீத் சடங்கு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Hansika motwanis bachelorette in greece with dancing on streets

Exit mobile version