ஜன நாயகன் படத்தில் ராப் பாடல்; உறுதி செய்த பிரபல பாடகர்: எகிறும் எதிர்ப்பார்ப்பு

தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் ஹனுமன்கின்த் பாடியுள்ள ராப் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் ஹனுமன்கின்த் பாடியுள்ள ராப் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Thalapathy 69 Rap

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம், தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்'. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த அரசியல் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Hanumankind confirms rap song in Thalapathy Vijay’s final film Jana Nayagan: ‘Anirudh’s created a great track’

இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ராப் பாடகரும், பாடலாசிரியருமான ஹனுமன்கின்த், 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஒரு அதிரடியான ராப் பாடலைப் பாடியுள்ளார்.

"நான் 'ஜன நாயகன்' திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். அனிருத் ரவிச்சந்தர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்," என்று ஹனுமன்கின்த் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் குறித்து மேலும் எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை என்றாலும், ஹனுமன்கின்த்தின் இந்த பங்களிப்பு 'ஜன நாயகன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisment
Advertisements

சமீபத்தில் ஹனுமன்கின்த் வெளியிட்ட பிக் டவுங்ஸ் ("Big Dawgs") (2024) என்ற பாடல் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட ரன் இட் அப் ("Run It Up") பாடல் இந்திய பாரம்பரிய தற்காப்பு கலைகளை காட்சிப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஹனுமன்கின்த் கன்னட திரைப்படமான 'பாப்கார்ன் மங்கி டைகர்' (2020) படத்தில் சரண் ராஜ் இசையில் "மாதேவா" என்ற பாடலையும், மலையாள திரைப்படமான 'ஆவேஷம்' (2024) படத்தில் சுஷின் ஷ்யாம் இசையில் "தி லாஸ்ட் டான்ஸ்" என்ற பாடலையும் பாடியுள்ளார். மேலும், இயக்குநர் ஆஷிக் அபுவின் 'ரைபிள் கிளப்' (2024) திரைப்படத்தில் விஜயராகவன், திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப், வாணி விஸ்வநாத் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து நடிகராகவும் அறிமுகமானார்.

'ஜன நாயகன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் எச். வினோத் இயக்கும் 6-வது திரைப்படமாகும். இதற்கு முன்பு அவர் 'சதுரங்க வேட்டை' (2014), 'தீரன் அதிகாரம் ஒன்று' (2017), 'நேர்கொண்ட பார்வை' (2019), 'வலிமை' (2022) மற்றும் 'துணிவு' (2023) ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, பாடல்களை கவிஞர் அறிவு எழுதியுள்ளார்.

விஜய் மற்றும் அனிருத் கூட்டணியில் ஏற்கனவே 'கத்தி' (2014), 'மாஸ்டர்' (2021), 'பீஸ்ட்' (2022) மற்றும் 'லியோ' (2023) போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.என்  புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் பணியை செய்கிறார். 'ஜன நாயகன்' திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: