Happy Birthday Ajith: நடிகர் அஜித் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான்! இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. ஆனால் அவைகள் எந்த விதத்திலும் அவருடைய புகழிற்கு களங்கம் விளைவிக்கவில்லை.
பிறந்தது ஹைதராபாத், அப்பா பாலக்காட்டு ஐயர், அம்மாவின் தாய்மொழி சிந்தி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அதனால் ஆரம்ப காலங்களில் தமிழ் பேச ரொம்பவும் கஷ்டப் பட்டார் அஜித்.
நடிப்பதை விட, ரேஸ் கார் ஓட்டுவதில் தான் அஜித்துக்கு ஆர்வம் அதிகம்.
1993-ல் அமராவதியில் நடிகரான பின்பும் கூட அவர், ரேஸ் ஆட்டோக்களை ஓட்ட மறக்கவில்லை.
சென்னை, மும்பை, டெல்லி மண்டலங்களில் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் அஜித். அதோடு சர்வதேச ரேஸ் பந்தயங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார். 2003-ல் ஃபார்முலா ஆசியா பி.எம்.டபிஸ்யூ சாம்பியன்ஷிப், 2010-ல் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ள ஒரே நடிகர் இவரே.
இருப்பினும் விபத்தில் சிக்கிக் கொண்டதால், படங்களில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது, உடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்தார் அஜித். இந்த விஷயம் அப்போது மீடியாவில் கிசுகிசுக்களாக வெளிவந்தது.
இரு குடும்பத்தின் சம்மதத்துடன் 2000-ஆம் ஆண்டு ஷாலினியை கரம் பிடித்தார் அஜித்.
இப்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
எப்போதுமே பொதுவெளியில் தன்னைக் காட்டிக்கொள்ள அஜித்துக்கு பிடிக்காது. அதனால் ரசிகர்கள் இவரை வெள்ளித்திரையில் மட்டுமே பார்க்க முடியும்.
தமிழ் சினிமா நடிகர்கள் கொஞ்சம் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாலே, அவர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிடும். ஆனால் இதிலிருந்து விலகியே இருக்கிறார் அஜித்.
தன்னுடைய ரசிகர் மன்றம் தவறாக செயல்படுவதை அறிந்து 40-வது பிறந்தநாளின் போது அதனை கலைத்தார்.
சுகாதாரம் மற்றும் குடியுரிமையை வலியுறுத்தி, அஜித்தின் பெற்றோர்கள் பெயரில் மோகினி - மணி அறக்கட்டளை நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.