Happy Birthday Dhanush: 2003இல் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தனுஷ், தமிழ் சினிமா உலகில் நீங்காத இடம் பிடித்த கதாநாயகனாக உலவி வருகிறார்.
பல்வேறு ஹிட் படங்களை தமிழ் மக்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல், ‘ராஜ்ஹனா’, ‘அத்ராங்கி ரே’ மற்றும் ‘ஷமிதாப்’ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டிலும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
இதையும் தாண்டி, சமீப காலத்தில் ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்நீ அப் பகிர்’ மற்றும் ‘தி க்ரே மேன்’ ஆகிய படங்களின் மூலம் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி தமிழ் மக்கள் பெருமைப்படும் வண்ணம் தனது பயணத்தை மேற்கொள்கிறார்.
தனுஷின் நடிப்பைத் தாண்டி, அவருடைய படங்களில் வரும் சண்டைக் காட்சிகளுக்குக் கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தனுஷ் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடிக்கும்போது அவர் தனது குழுவிடம் அதிகம் கேட்ட கேள்வி ‘ரஸ்ஸோவிற்கு என்னை எப்படி தெரியும்?” என்பது தான்.
ஏனென்றால், மார்வெல் படங்களின் இயக்குநரான ஜோ ரஸ்ஸோ இ.டி. டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், “நாங்கள் மார்வெல் திரைப்படங்களை இயக்கம் பொழுது, மற்ற படங்களின் அதிரடி காட்சிகளை கவனிப்பதுண்டு. அப்போது, தனுஷ் நடித்த படங்களின் சண்டைக் காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் படத்தில் வரும் சில காட்சிகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று கூறினார்.
ஆகவே, தனுஷின் 39ஆவது பிறந்தநாளை (28ஆம் தேதி ஜூலை) முன்னிட்டு, அவர் நடித்த படங்களின் சிறந்த சண்டை கட்சிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
ஜகமே தந்திரம் மற்றும் தி கிரே மேனிற்கும் இடையே உள்ள ஒற்றுமை
‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘தி கிரே மேன்’ ஆகிய படங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு படங்களும், வில்லன்களின் கோட்டையைத் தாக்கும் நல்ல மனிதர்களைப் பற்றிய கதையாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் திரைப்படத்தில், வேஷ்டி அணிந்த சுருளி (தனுஷ்) வெள்ளை மேலாதிக்கவாதியான பீட்டர் ஸ்ப்ராட் (ஜேம்ஸ் காஸ்மோ) மற்றும் அவரது கும்பலை எதிர்கொள்கிறார். இப்படத்தில் வரும் சண்டைக்காட்சி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பாடல் “நான் தான் டா மாஸ்” ஏற்கனவே அதிரடியாக இருக்கும் கட்சிக்கு வலுசேர்க்கிறது.
பொல்லாதவன்: இந்தியன் புரூஸ் லீ
வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘பொல்லாதவன்’ படத்தின் இறுதியில் வரும் சண்டை காட்சிகள், ராம்போ ராஜ்குமாரின் எடிட்டிங்கினால் மெருகேற்றப்பட்டிருக்கிறது. இக்காட்சியை பார்த்து ஜோ ரஸ்ஸோ தனுஷை ‘இந்தியன் புரூஸ் லீ’ என்று அழைத்தார்.
அசுரன்: சாது மிரண்டால்!
67வது தேசிய திரைப்பட விருதுகளில் அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அசுரனில் சிறந்த சண்டைக் காட்சி ஒன்று வரும்போது, அதைச் சுருக்கமாக ஒரு தமிழ்ப் பழமொழியில் கூறிவிடலாம். அது என்னவென்றால்: “சாது மிரண்டால் காடு கொள்ளாது”, அதாவது ஒரு முனிவர் சினங்கொண்டு காட்டுக்குச் சென்றால், காடு அதை எதிர்க்க முடியாது. படத்தின் இடைவெளிக்கு முந்தைய சண்டைக் காட்சியில், சிவசாமி (தனுஷ்) இறுதியாக தனது ஜென் நிலையை இழந்து ஈட்டியை எடுக்கிறார், அதையே இப்பழமொழியுடன் பொருத்திப்பார்க்க முடியும்.
செயலில் கொலவெறி சிறுவன்
தனுஷ் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான ஆதி முறையுடன் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் பட்டாஸின் சண்டைக் காட்சியும், படிக்காதவனில் இருந்து ஒருவருக்கு ஒருவர் நடக்கும் சண்டையும் தனுஷின் சிறந்த சண்டைப் பட்டியலில் இடம்பெறும். இருப்பினும், தனுஷின் 3 படத்தின் (இதில் ஹிட் பாடலான “கொலவெறி டி” இடம்பெற்றது) இந்த பைத்தியக்காரத்தனமான மற்றும் அவ்வப்போது வேடிக்கையான சண்டை கவனிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil